லோக்சபா தேர்தல்.. மாறுமா களம்? உத்தர பிரதேசத்தில் வெல்லப்போவது யார்? India TV கருத்துக்கணிப்பு
லக்னோ: 80 நாடாளுமன்ற தெகுதிகளை கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது பற்றி இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு சரியாக இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை என்பதால் தேர்தல் களம் தற்போதே கொதிக்க தொடங்கிவிட்டது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளது. நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி போட்டியிட முடிவு செய்துள்ளது. தனித்தனியாக பிரிந்து இருந்தால் பாஜகவுக்கே களம் சாதகமாக மாறும் என்பதால் ஓருங்கிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கின்றன. இதற்காக பாட்னா மற்றும் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்தன.
விரைவில் மும்பையில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் களம் இப்படி பரபரத்துக் கொண்டு இருக்க கருத்துக்கணிப்புகளையும் செய்தி நிறுவனங்கள் தொடங்கி விட்டன. அந்த வகையில், இந்தியா டிவி -சிஎன்எஸ் இணைந்து நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியா முழுவதும் 23,871 ஆண்கள் மற்றும் 20,677 பெண்கள் என மொத்தம் 44,548 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கான முடிவினை நேற்று வெளியிட்டு இருந்த நிலையில், மீதமுள்ள 278 தொகுதிகளுக்கான கணிப்புகளை இன்று வெளியிட்டு வருகிறது. அதன்படி, பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படும் உத்தர பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலில் யாருக்கு களம் சாதகமாக இருக்கும் என்றும் கருத்துக் கணிப்பு நடத்தி இந்தியா டிவி - சி.என்.எஸ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை நாட்டிலேயே பெரிய மாநிலம் ஆகும். இங்கு 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 73 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அப்னா தால், எஸ்.பி.எஸ்.பி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளன.
இதில் பாஜக மட்டும் 70 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெறலாம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமாஜ்வாதி கட்சி + ஆர்.எல்.டி கட்சிகள் முறையே 4 மற்றும் 1 இடத்திலும் காங்கிரஸ் கட்சி 2 இடத்தில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது India TV-CNX கருத்துக் கணிப்பில் பாஜக கடந்த முறையை விட வரும் தேர்தலில் அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications