Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛தாய் சோனியா வழியில் மகன்’’.. ரேபரேலியில் களமிறங்கும் ராகுல்? அப்போ பிரியங்கா காந்தி.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தாய் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி ட்விஸ்ட் வைக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரேபரேலியில் ராகுல் காந்தியும் களமிறங்கலாம் எனவும், பிரியங்கா காந்தி அமேதியில் போட்டியிடலாம் எனவும், அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவலும் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேசம்.. இந்தியாவில் அதிக சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இங்கு 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால் மத்தியில் ஆட்சியை எளிதாக பிடிக்க முடியும். இதனால் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தர பிரதேசம் என்பது அதிக கவனம் பெறும்.

Loksabha Election 2024: Rahul Gandhi may contest from Rae Bareli and his sister likely to enter politics from Amethi

அதோடு நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அதிக கவனம் பெறுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. இந்தியாவில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இங்குள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது தான் மற்றொரு காரணமாகும்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை எடுத்து கொண்டால் பிரதமர் மோடி, மத்திய பாதுாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹேமமாலினி, காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டனர். இதில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஹேமமாலினி மதுராவிலும் வாகை சூடினார்கள். சோனியா காந்தி ரேபரேலியில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி அமேதியில் தோற்றார். அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். இருப்பினும் 2 தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்று எம்பியானார்.

மேலும் கடந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 62 இடங்களில் வென்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 தொகுகுதிகளிலம், பாஜக கூட்டணியில் ஏடிஎஸ் கட்சி 2 தொகுதியிலும் வென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அதாவது சோனியா காந்தி மட்டுமே ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் தற்போது சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இதனால் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக முடிவு செய்து மனுத்தாக்கல் செய்தார். அதோடு அவர் போட்டியின்றி ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி ரேபரேலியில் போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இவர் கடந்த 20024, 2009, 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் ரேபரேலி என்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் சோனியா காந்தியின் மாமனார் பெரோஸ் காந்தி 1952, 1957 ல் வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு அவரது மனைவியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 1967, 1971, 1980 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு கடந்த 20024, 2009, 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தார். தற்போது சோனியா காந்தி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரேபரேலியில் மகள் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் அதில் காங்கிரஸ் கட்சி மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவத ரேபரேலியில் பிரியங்கா காந்திக்கு பதில் ராகுல் காந்தி களமிறங்கலாம் என கூறப்படுகிறது. ராகுல் காந்தியை பொறுத்தமட்டில் அவர் கடந்த 2004, 2008, 2014 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இன்னொரு பாரம்பரிய தொகுதியான அமேதியில் வென்றார். கடந்த தேர்தலில் அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். இந்த முறை அமேதியில் போட்டியிடும்படி ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தியின் ரேபரேலியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் பாஜக அலை வீசி வருகிறது. இதில் 2014ல் அமேதியில் ராகுல், ரேபரேலியில் சோனியா காந்தி வென்றனர். ஆனால் 2019ல் சோனியா காந்தி மட்டும் ரேபரேலியில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் சோனியா காந்தி 5,34,918 ஓட்டுகள் பெற்று பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை விட 1,67,178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் இந்த முறை அங்கு ராகுல் காந்தி போட்டியிட்டால் அவர் எளிதாக வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. இதன்மூலம் ராகுல் காந்தி ‛இந்தியா' முழுவதும் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. அது காங்கிரஸ் மட்டுமின்றி ‛இந்தியா' கூட்டணிக்கு பிளஸ் பாயிண்டாக அமையலாம் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.

மாறாக ரேபரேலி தொகுதிக்கு பதில் அமேதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அமேதியில் தற்போது எம்பியாக ஸ்ருதி இரானி உள்ளார். இதன்மூலம் பிரியங்கா காந்தி-ஸ்மிருதி இரானி இடையே போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தி தோற்று இருந்தாலும் கூட அங்கு காங்கிரஸ் கட்டமைப்பு நன்றாகவே உள்ளது. இதனால் பிரியங்கா காந்தி போட்டியிடும் பட்சத்தில் நிச்சயம் அவர் ஸ்மிருதி இரானியை வீழ்த்தலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானி 4,68 ஆயிரத்து 514 ஓட்டுகள் பெற்றார். ராகுல் காந்தி 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 ஓட்டுகள் மட்டுமே பெற்று 55 ஆயிரத்து 120 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தகைய சூழலில் தான் இங்கு பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவரால் ஸ்மிருதி இரானியை வீழ்த்த முடியும் என காங்கிரஸ் கட்சி நம்புவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டபோது, ‛‛அமேதி மற்றும் ரேபரேலியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தான் போட்டியிட உள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். இதனால் எந்த தொகுதியில் யார் போட்டியிடுகின்றனர்? என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அது முடிவு செய்யப்படும்'' என தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+