வினோத சத்தம்.. பெரிய சைஸ் கட்அவுட்டில் யாருன்னு தெரியுதா.. வேறு வழியில்லை.. மெட்ரோ அதிரடி
லக்னோ மெட்ரோ ரயில் நிலையங்களில் குரங்குகள் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது
லக்னோ: லக்னோ ரயில்வே ஸ்டேஷன்களில் குரங்கு கட்அவுட்கள் பெரிய சைஸில் வைக்கப்பட்டிருப்பதை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநில லக்னோவில் நிறைய மெட்ரோ ரயில் நிலையங்கள்உள்ளன.. ஆனால், இங்கு எந்நேரமும் குரங்குகள் படையெடுத்து வந்துவிடும்..
மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் உடைமைகளை அவைகளை பறித்து கொண்டு ஓடிவிடுகின்றன..

நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகமானதுடன், குரங்குகளை அங்கிருந்து விரட்டவும் முடியாமல் ரயில்வே ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டனர். பயணிகளும் ஒருவித அச்சத்துடனேயே ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர்... குழந்தைகளும் குரங்குகளை கண்டு கதறி அழுகின்றன.
எந்நேரமும் தங்கள் உடைமைகளை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு பயணிகள் ஆளாயினர்.. கொஞ்சம் அசந்தாலும், பொருட்களை பறித்து சென்றுவிடுவதால் அவைகளை யாராலும் விரட்டி பறிக்கவும் முடியவில்லை.. இதனால், குரங்குகளால் தங்களுக்கும், தங்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால், மெட்ரோ நிறுவனம் ஒரு புதுவித முயற்சியை கையில் எடுத்தது.. அதன்படி, ரயிலில் குரங்குகள் ஏறாமல் தடுக்க, ரயில்வே ஸ்டேஷனில் லங்கூர் வகை குரங்கு பொம்மைகளை வைத்துள்ளனர்.. மேலும் அவைகள் அலறும்படியும் ஒலி ஒலிபரப்பப்படுகிறது.
பெரிய பெரிய வடிவத்தில் அந்த குரங்கு பொம்மைகள் கட்அவுட்களாக வைக்கப்பட்டுள்ளன.. இதுபோல 9 ரயில்வே ஸ்டேஷன்களில் லங்கூர் வகை குரங்குகளின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்து ரயில்வே நிறுவன அதிகாரிகள் சொன்னதாவது:
"இந்த முயற்சி ஒரளவு பயன் தருகிறது.. பாட்ஷா நகர் ரயில்நிலையத்தில் குரங்கு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன... இதனை கண்டு குரங்குகள் வராமல் உள்ளன.. ஆரம்பத்தில் லங்கூர் குரங்குகள் ஆக்ரோஷமாக கத்தும் சத்தத்தை ரயில் நிலையங்களில் ஒலிக்க செய்தோம்... இப்போது அது பலன் தரவில்லை.. அதனால்தான், குரங்கு கட் அவுட்களை வைப்பது என்று முடிவெடுத்தோம்..
அத்துடன் குரங்குகளின் ஆக்ரோஷமான சத்தத்தையும் ஒலிக்க செய்கிறோம்.. திடீரென ஒலிக்கும் பொம்மை குரங்குகளின் ஆக்ரோஷமான சத்தத்தை கேட்டு நிஜ குரங்குகள் ஓடிவிடுகின்றன.. இந்த குரங்கு கட்அவுட்களையும் வேறு வேறு இடங்களில் மாற்றி மாற்றி வைத்து வருகிறோம்" என்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications