"லுலு மாலில்" நமாஸ் + மந்திரம்.. போர்டு வைத்த நிறுவனம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை.. யோகி போட்ட ஆர்டர்
லுலு மாலில் நடந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை வேண்டும் என்றார் உபி முதல்வர் யோகி
லக்னோ: மத வழிபாடுகளுக்கும், பிரார்த்தனைக்கும் இடமில்லை என்று லுலு மாலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதையடுத்து, உபி முதல்வர் யோகி இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். "லக்னோ நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்... இதுபோன்ற தொல்லைகளை உருவாக்க முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள அபுதாபியில் வசித்து வருபவர் யூசுப் அலி.. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.. உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலமான தொழிலதிபரும்கூட.
லுலு குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.. இந்த குழுமமானது, லுலு என்ற பெயரில் வணிக வளாகத்தை உலகின் பல நகரங்களில் அமைத்துள்ளது... அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், இந்தக் குழுமத்தின் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

லுலு மால்கள்
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ நகரிலும், லுலு நிறுவனம் மிகப் பெரிய வர்த்தக வளாகத்தை நடத்தி வருகிறது... இங்கு சமீபத்தில்தான் இந்த மால் திறக்கப்பட்டது.. இந்நிலையில், இந்த மாலில் கடந்த சில தினங்களுக்கு முஸ்லிம் குழு ஒன்று நமாஸ் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது... இந்த வீடியோவை பார்த்ததும், முஸ்லிம்களுக்கு மட்டுமே லுலு மால் வேலைவாய்ப்பு கொடுத்ததாக எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்தன.

லுலு மால்
இதையடுத்து, லுலு நிர்வாகம் உடனடியாக போலீசில் புகார் தந்தது.. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லுலு மாலில் அனுமன் சாலிசாவை பாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்தனர்.. ஆனால், மறுபடியும், ஜூலை 12ம் தேதியும், இதே இடத்தில் தொழுகை முஸ்லிம்கள் சிலர் தொழுகை நடத்தினர்.. இது அறிந்து விரைந்து வந்த போலீசார், தொழுகை நடத்திய 8 முஸ்லிம் ஆண்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.. அவர்கள் மீது மது உணர்வுகளை சீர்குலைத்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது..

வழிபாடுகள்
அடுத்தடுத்து, தொழுகைகள் நடந்ததால், இந்த விவகாரம் பற்றிக் கொண்டு எரிந்தது.. பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், இப்படி குறிப்பிட்ட மதத்தினர் வழிபாடு நடத்தியது தவறு என்றும், பொது இடத்தை மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால் மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும் சில இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.. அத்துடன், கடந்த 15ஆம் தேதி, இந்து மதத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டி வழிபாடுகளையும் நடத்தியுள்ளனர்.. முஸ்லிம் நபர்களுக்கு பதிலடியாக, பிரார்த்தனை நடத்த முயன்ற அந்த 3 இந்து மத ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

தொழுகைகள்
அவர்களுடன் முஸ்லீம் நபர் ஒருவரும், தொழுகை நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். நிலைமை கைமீறி போவதை அறிந்த லுலு மால் நிறுவனம், அதற்கு அடுத்த நாளே, ஒரு நோட்டீஸ் போர்டை வைத்துவிட்டது.. வணிக வளாகத்தில். மத வழிபாடுகளுக்கும், பிரார்த்தனைக்கும் இடமில்லை என்று அறிவிப்பு பலகையை அங்கு வைத்தது... இதற்கு பிறகு இந்த விவகாரம் ஓரளவு தணிய ஆரம்பித்துள்ளது..

தொல்லைகள்
இது தொடர்பாக, 10-க்கும் மேற்பட்டோர் மீது இதுவரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கருத்து கேட்கப்பட்டது.. அவர் சொல்லும்போது, "லக்னோ நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்... இதுபோன்ற தொல்லைகளை உருவாக்க முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications