ஆபாச நடிகை அத்துமீறி பிளாக்மெயில்! அவமானத்தில் குடும்பத்துடன் பாய்சன் குடித்த இளைஞர்! பகீர் வீடியோ
லக்னோ: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரை ஆபாச நடிகை ஒருவர் பிளாக் மெயில் செய்துள்ளார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் மனமுடைந்த அந்த நபர் குடும்பத்துடன் பாய்சன் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இரு நாட்களாகவே இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வந்தது. அதில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் பாய்சன் குடித்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் குடும்பத்துடன் விஷம் குடிக்கும் முன்பு, தனக்கு நேர்ந்த பிரச்சினை குறித்தும் விளக்கியிருந்தார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்துடன் விஷம் குடித்த நபர் ஆஷி கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நபர் சில காலம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது தான் இவருக்கு முதலில் பிரச்சினை தொடங்கியுள்ளது. இதையடுத்து தான் வேறு வழியின்றி விஷயத்தைக் குடிப்பதாக அந்த வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார். அவருடன் அவரது தாய் மற்றும் மனைவி இணைந்து விஷயத்தைக் குடித்துள்ளனர்.

ஆபாச நடிகை
அதாவது தன்னை மும்பையை ஆபாச நடிகை ஒருவர் பணம் கேட்டுத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இதனால் வேறு வழியின்றி விஷம் குடிப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த நபர் வீடியோவில் குறிப்பிடும் ஆபாச நடிகை மும்பையை இப்போது வசித்து வருகிறார்.. ஆஷி கான் தன்னுடன் கள்ள உறவில் இருப்பதாகக் கூறி அந்த நடிகை பிளாக்மெயில் செய்து மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. அசாமின் கவுகாத்தியைச் சேர்ந்த அந்தப் பெண் மும்பையில் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்ததாகவும் இப்போது ஆபாசப் படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஷாக் வீடியோ
ஆபாசப் பட நடிகையின் பிளாக்மெயிலுக்கு பயந்து இளைஞர் குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் விஷம் குடிப்பதை ஆன்லைனிலும் லைவ் செய்துள்ளனர். இதையடுத்து அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்கள் வீட்டில் புகுந்து அவர்கள் மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மூன்று பேருமே மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷம் குடிக்கும் முன்பு, அந்த நபர் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையும் விளக்கியிருந்தார்.. சுமார் 61 நொடிகள் ஓடும் அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பிளாக் மெயில்
அந்த வீடியோவில் ஆஷி கான், "எனது பெயர் ஆஷி கான். நான் உஜ்ஜயினியில் உள்ள லோஹே புல்லில் வசித்து வருகிறேன். இந்த வீடியோவில் என்னுடன் இருப்பவர்கள் என் தாய் மற்றும் மனைவி. மும்பையைச் சேர்ந்த ரிம்ஜிம் தாஸ் என்ற ஆபாச நடிகை என்னை மிரட்டித் தொடர்ந்து பணம் கேட்டு வருகிறார். நான் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். என் திருமணத்தின் போது, வேறு வழியின்றி நான் அவருக்குப் பணம் கொடுத்தேன்.. இப்போது கூடுதலாகப் பணத்தைக் கேட்கிறார்.

விஷம் குடித்த குடும்பம்
நான் சில காலம் மும்பையில் வேலை செய்து வந்தேன். அப்போது என்னை பக்காவாக திட்டமிட்டு என்னைப் பலாத்கார வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பினார். அங்கிருந்த வந்த பிறகும், என்னை பிளான் போட்டு உஜ்ஜயினி சிறைக்கும் அனுப்பினார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுகிறார். நான் ஏன் பணம் தர வேண்டும் எனக் கேட்டால், கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார்.. இனியும் இப்போது, என்னால் அவருக்குப் பணம் கொடுக்க முடியாது,. இதன் காரணமாக நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்" என்று அவர் அதில் கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். மூன்று பேரும் இப்போது ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் சற்று தேறிய பிறகு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் வீடியோவில் கூறியது உண்மையாக இருந்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டுச் சம்மந்தப்பட்ட பெண் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications