பர்தா அணிய மறுத்ததால் மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்! அப்பாவி பிஞ்சுகளின் நிலைமையும் இப்படி ஆயிடுச்சே!
லக்னோ: பர்தா அணியாத மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவியை கொலை செய்ததை நேரில் பார்த்ததால், இரண்டு குழந்தைகளையும் அவர் கொலை செய்திருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லியில் கான்ட்லா காவல் நிலையத்திற்குட்பட்ட கர்ஹி கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபாரூக். இவருக்கு திருமணமாகி 32 வயதில் தாஹிரா எனும் மனைவியும், அஃப்ரீன் (14) மற்றும் செஹ்ரீம் (7) என இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

கடந்த டிச.9ம் தேதி முதல் தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று, ஃபாரூக்கின் தந்தை நேற்று போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரை விசாரித்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது தாஹிரா, தனது தாய் வீட்டிற்கு கடந்த டிச.9ம் தேதி புறப்பட்டு சென்றிருக்கிறார். வெளியில் போகும்போது பர்தா அணிந்து செல்லுமாறு கணவர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஆனால், தாஹிரா கேட்கவில்லை. தாய் வீட்டுக்கு போகும்போது இந்த விவகாரம் தொடர்பாக சண்டை வெடித்திருக்கிறது.
சண்டை ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியிருக்கிறது. ஆத்திரமடைந்த ஃபாரூக், துப்பாக்கியை எடுத்து மனைவி தாஹிராவை சுட்டிருக்கிறார். இதனால் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து அவர் உயிரிழந்திருக்கிறார். இதனை பார்த்து உதவிக்கு வந்த மகள் அஃப்ரீனையும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதேபோல இந்த கொலையை நேரில் பார்ப்பதற்காக இரண்டாவது மகள் செஹ்ரீமை கழுத்து நெறித்து கொலை செய்திருக்கிறார்.
இந்தக் கொடூரச் செயலை ஃபாரூக் முன்னரே திட்டமிட்டிருந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது. வீட்டின் முற்றத்தில் ஏழு அடி ஆழமான பள்ளத்தை அவர் தோண்டி வைத்திருந்தார். அங்கே சடலங்களைப் புதைத்து, அதற்கு மேல் செங்கற்களால் மூடியுள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை வெளியே எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தான் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், பணப் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் ஃபாரூக் ஒப்புக்கொண்டார். இந்த வாக்குவாதங்களும், பர்தா அணியாமல் தாஹிரா தனது பெற்றோரைச் சந்திக்க சென்ற சம்பவமும் சேர்ந்து இந்த பயங்கரமான கொலைகளுக்குத் தூண்டுகோலாக அமைந்ததாக ஃபாரூக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலையின்மை, ஊதிய உயர்வு இல்லாதது, குறைவான ஊதியம், விலைவாசி உயர்வு போன்றவை நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல பர்தா அணியாதது தொடர்பான பிரச்சனையும் சேர்ந்து கொலை செய்ய தூண்டியிருக்கிறது. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications