ஆல்வார் பலாத்கார வழக்கு.. ரொம்பவும் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க... மோடி மீது மாயாவதி தாக்கு
லக்னோ: ராஜஸ்தானின் ஆல்வார் கூட்டு பலாத்கார வழக்கை முன்வைத்து பிரதமர் மோடி கேவலமான அரசியல் செய்வதாகவும் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.
ஆல்வார் கூட்டு பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஆளும் ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ஆல்வார் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாநில அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆல்வார் வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இதனால் அம்மாநில அரசுக்கான ஆதரவை மாயாவதி வாபஸ் பெற வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து மாயாவதி தெரிவித்துள்ளதாவது:
ஆல்வார் பலாத்கார வழக்கை அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். இதை முன்வைத்து கேவலமான அரசியல் செய்கிறார்... முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் தலித்துகள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உனாவாவில் தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர், ரோஹித் வெமுலாவை கொலை செய்தீர்கள்.. இத்தனை கொலைகளுக்கும் பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏன் செய்யவில்லை?
இவ்வாறு மாயாவதி கூறினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications