மகளுக்கு பதிலாக தானே மணப்பெண்ணாக மாறிய தாய்.. மாமியாரை திருமணம் செய்து ஏமாந்த இளைஞர்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது பெண்ணுக்கு பதில் தானே மணமகளாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அறியாத மணமகன், தனது மாமியாருக்கு தாலி கட்டியிருக்கிறார்.
திருமணம் முடிந்த பின்னர்தான் இந்த பஞ்சாயத்து மணமகனுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து மணமகன் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் எனும் பகுதியில் நடந்திருக்கிறது. இப்பகுதியை சேர்ந்த முகமது அசீம் எனும் இளைஞருக்கும், இதே பகுதியை சேர்ந்த மந்தாஷா எனும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தை மணப்பெண்ணின் சகோதரரும், அவருடைய மனைவியும் நடத்தியுள்ளனர். நிச்சயித்தபடி திருமணம் கடந்த 31ம் தேதி நடந்திருக்கிறது. ஆனால் இந்த திருமணத்தில் இளைஞர் ஏமாற்றப்பட்டிருப்பது பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது.
அதாவது திருமணமான பிறகு தனது மனைவியின் முகத்தை பார்க்க விருப்பப்பட்டிருக்கிறார். இதற்காக முக்காடை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு மந்தாஷாவுக்கு பதில் அவரது தாய் மண கோலத்தில் இருந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ந்து போன மணமகன் அசீம் குடும்பத்தினரிடம் இந்த விவகாரத்தை தெரிவித்திருக்கிறார். விஷயம் பெரிய பஞ்சாயத்தாக வெடித்திருக்கிறது. மணமகனின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
புகாரில், "மணமகள் தரப்பு தங்களை ஏமாற்றியிருப்பதாகவும், மணமகளின் தாய் கணவனை இழந்தவர். இவர் மண கோலத்தில் இருந்திருக்கிறார் எனில், அவருக்கும் எங்கள் வீட்டு பையனுக்கும் திருமணம் நடந்துவிட்டது என்றுதான் அர்த்தம். அவர்கள் எங்களை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்காக பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த திருமணம் செல்லாது. நாங்கள் திருமணத்திற்காக ரூ.5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறோம். எனவே, அந்த பணத்தை திருப்பி தர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், ஊர் மக்கள் சேர்ந்து சமாதானம் பேசியிருக்கிறார்கள். இதனையடுத்து மணமகன் வீட்டில் சமாதானத்திற்கு இறங்கி வந்திருக்கிறார்கள். போலீசிடம் கொடுத்த புகாரும் வாபஸ் வாங்கப்பட்டிருக்கிறது. தாய் ஒருவர் தனது மகளுக்கு பதில் தானே மணமகளாக மாறியுள்ள சம்பவம் உ.பியில் பேசுபொருளாகியுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications