உத்தர பிரதேசத்தில் ஷாக்.. முஸ்லிம் தம்பதி படுகொலை! இந்து பெண்ணுடன் ஓடிய மகனால் வெறிச்செயல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மகன் இந்து பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடியதால் அவரது பெற்றோரை ஒரு கும்பல் வீடு புகுந்து இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் அருகே உள்ள ராஜியூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அப்பாஸ். இவரது மனைவி கம்ரூல் நிஷா. இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார். இவர்களின் வீடு அருகே வசித்து வருபவர் சவுகத் ராம்பால். இவருக்கு மகள் உள்ளார்.

இந்நிலையில் தான் அப்பாஸ்-கம்ரூல் நிஷா தம்பதியின் மகனுக்கும், சவுகத் ராம்பாலின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தான் கடந்த 2020ம் ஆண்டில் அப்பாஸ் மகன், சவுகத் ராம்பாலின் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதையடுத்து சவுகத் ராம்பால் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஓடிப்போன ஜோடியை போலீசார் மீட்டனர். அந்த சமயத்தில் அந்த பெண் 18 வயது நிரம்பாத மைனர். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அப்பாஸின் மகனை கைது செய்தனர்.
இந்நிலையில் தான் அப்பாஸின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவர் சவுகத் ராம்பாலின் மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால் சவுகத் ராம்பாலின் குடும்பத்தினர் கடும் கோபம் அடைந்தனர். மேலும் பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் சவுகத் ராம்பால் உள்பட சிலர் அப்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த அப்பாஸ் மற்றும் அவரது மனைவி கம்ரூல் நிஷா ஆகியோரை கொடூரமாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் இறந்தனர். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள்.
சம்பவம் குறித்த அறிந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரட்டை கொலை தொடர்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுகத் ராம்பால் உள்பட 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications