தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற புதிய திட்டம்.. முழுவீச்சில் களம் இறங்கும் உத்தரப் பிரதேசம்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் தரிசு நிலங்களை வளமான நிலமாக மாற்ற யோகி ஆதித்யநாத் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் தரிசு நிலங்களை வளமான நிலமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

மாநிலம் முழுவதும் தரிசு நிலங்களை மேம்படுத்துதல், மண்ணின் ஆரோகியத்தை அதிகரித்தல், வேளாண் மையங்களை நிறுவுதல் உள்ளிட்டவற்றிற்காக பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கிசான் சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5.7 கோடியை யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிறப்பு மையத்தை நிறுவ ரூ.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது மட்டுமல்லாது, இதனை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக கண்காணித்து வருகிறார். தரிசு நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்ற முன்வரும் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
"உத்தரப் பிரதேசம் பொருளாதாரத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் உள்ள நிலங்களை வேளாண் தொழிலுக்கு ஏற்றார் போல் மாற்றி உணவு உற்பத்தியிலும் சாதனை படைக்க யோகி ஆதித்யநாத் முயன்று வருகிறார். அதற்காகதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டம் நிச்சயம் வெற்றியடையும்" என்று கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications