ஏழைகள் மகிழ்ச்சியாக இருக்காங்க..எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன.. பிரச்சரத்தில் பிரதமர் மோடி வேதனை
லக்னோ : இந்திய தேசத்தின் முன் சவால்கள் எழும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் அரசியல் ஆதாயத்தை தேடுகிறார்கள் என உத்தரப்பிரதேசம் மாநில கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.

7ஆம் கட்ட வாக்குப் பதிவு
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப் பதிவு 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப் பதிவு 20ஆம் தேதியும், 4ஆம் கட்டமாக வாக்குப் பதிவு 23ஆம் தேதியும், 5ஆம் கட்ட வாக்கு பதிவு 27ஆம் தேதியும் நடைபெற்றது. கடைசியாக 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 3ஆம் தேதியும் நடைபெற்று முடிவடைந்தது.

தீவிர பிரச்சாரம்
உத்திரபிரதேச மாநிலத்தில் இதுவரை 349 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் அதாவது மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாரணாசியில் உள்ள கஜூரி கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

அரசியல் ஆதாயம்
பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாடு சவால்களை எதிர்கொண்டாலும் எதிர்க்கட்சிகள் அரசியல் நலன்களுக்காகவே பார்க்கின்றன, இதனால் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தேசத்தின் முன் சில சவால்கள் எழும்பும் போதெல்லாம், இந்த (காங்கிரஸ் ) வம்சத்தினர் தங்கள் அரசியல் நலன்களுக்காகத் தேடுகிறார்கள். இந்தியாவின் பாதுகாப்புப் படைகளும் மக்களும் நெருக்கடியைச் சமாளித்தால், எதிர்க்கட்சிகள் நிலைமையை இன்னும் மோசமாக்குவதற்கு எல்லாவற்றையும் செய்கின்றன. இதை நாங்கள் பார்த்தோம். தொற்றுநோய் மற்றும் இன்று உக்ரைன் நெருக்கடியின் போதும் என்றார்.

கடும் விமர்சனம்
மேலும், தன் மீதான வெறுப்பின் காரணமாக, "வம்சத்தினர்" உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பதையும், ஸ்வச் பாரத் அபியானையும் கேலி செய்வதாகக் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் கூட, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸைப் பற்றி அவர் பேசுகையில், காதியிலிருந்து பல ஆண்டுகளாக அரசியல் லாபத்தைப் பெற்ற கட்சி இப்போது அதன் பெயரைக் கூட எடுக்கத் தயங்குகிறது. காதி மற்றும் யோகாவை சர்வதேச பிராண்டுகளாக தனது அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications