லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்படி இருக்கீங்க?.. இளையராஜாவின் கைகளை இறுக்க பற்றிய பிரதமர் நரேந்திர மோடி.. பூரித்து போன இசைஞானி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளையராஜாவின் கைகளை பிரதமர் நரேந்திர மோடி இறுக்க பற்றிக் கொண்டு நலம் விசாரித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்ட கால பாரம்பரிய, கலாச்சார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்திற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியில் வந்திருந்தார்.

பிரியா மரணத்திற்காக.. டாக்டர்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை பிரியா மரணத்திற்காக.. டாக்டர்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

மத்திய அமைச்சர் எல் முருகன்

மத்திய அமைச்சர் எல் முருகன்

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல் முருகன், தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலங்களவை எம்பி இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் கை குலுக்கினார்.

இளையராஜாவுக்கு வரவேற்பு

இளையராஜாவுக்கு வரவேற்பு

பின்னர் இளையராஜாவை கண்டதும் அவரது கைகளை பற்றிக் கொண்டு நலம் விசாரித்தார். அவரிடம் நன்றாக இருக்கிறீர்களா என கேட்டு கைகளை குலுக்கினார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்த தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலையிடம் வந்த பிரதமர், அவர் கூறிய வணக்கத்திற்கு, பதில் வணக்கம் வைத்தார். பிறகு ஏதோ கேட்டுவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.

அண்ணாமலைக்கு வணக்கம்

அண்ணாமலைக்கு வணக்கம்

பொன்னார், எல் முருகன், இளையராஜாவிடம் மோடி கைகுலுக்கியது போல் அண்ணாமலையிடம் கைகுலுக்கவில்லை. இதனால் அண்ணாமலை மீது பிரதமர் மோடிக்கு அதிருப்தி இருப்பதாகவே சொல்லப்படுகிறது. தமிழகத்தில் திமுகவை எதிர்த்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தாலும் சில நேரங்களில் அது அவருக்கே நேரெதிராகவே முடிந்துள்ளது.

என்ன அதிருப்தி

என்ன அதிருப்தி

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது, அதிமுக எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தரக்குறைவாக விமர்சித்தது, மதுரையில் அமைச்சர் பிடிஆர் காரின் மீது செருப்பு வீசிய சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களால் அண்ணாமலை மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காகத்தான், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடித்தாலும் முக்கிய முடிவுகளை எடுக்க முன்னாள் தலைவரும் மத்திய இணையமைச்சருமான எல் முருகனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாஜக தலைமை அலுவலகம்

பாஜக தலைமை அலுவலகம்

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் எல் முருகனுக்கு என தனி அறையும் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இது போன்ற அதிருப்திகளின் வெளிப்பாடே பிரதமர் நரேந்திர மோடி அண்ணாமலையிடம் மற்றவர்களிடம் பேசியது போல் பேசவில்லை என கூறப்படுகிறது. அது போல் எல் முருகன் கூறுவதை மட்டுமே அண்ணாமலை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

English summary
PM Narendra Modi welcomes Ilayaraja for Kasi Tamil Sangamam held in Varanasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X