"பழிவாங்கும் அரசியல்".. அகிலேஷின் மீது பாய்ந்த பாஜக.. உபி மாநில வளர்ச்சியே முக்கியம்.. பிரதமர் உரை
அகிலேஷ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டை முன்வைத்து உரையாற்றி உள்ளார்
லக்னோ: "உத்தரபிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடுமையாக பாஜக உழைத்து வருகிறது.. ஆனால், சமாஜ்வாதியினர் எங்களை பழிவாங்க துடிக்கிறார்கள்" என்று பிரதமர் மோடி அகிலேஷ் யாதவ் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க போகின்றன.. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் நடக்க உள்ளது.
மதமாற்றம்! அரியலூர் மாணவி வழக்கில் தமிழ் படத்தை எடுத்துக்காட்டிய நீதிபதி சுவாமிநாதன் -என்ன சொன்னார்?
மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடப்பதாக அறிவிப்பாகி உள்ளது.. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது... ஆனாலும், பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி வலுவாக எழுந்துள்ளது.

தடை விதித்த ஆணையம்
தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக, ஜனவரி இறுதி வரை பேரணிகள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.. இந்த தடையை வரும் 31 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவும் பிறப்பித்துவிட்டது.. இதனால் பிரச்சாரங்களை எப்படி நடத்துவது என்று தேர்தல் நடக்க போகும் 5 மாநில அரசியல் கட்சிகள் விழித்து கொண்டு வருகின்றன.. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உபி தேர்தலை நாடே எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்கள் பிரச்சாரங்களை பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

வீடியோ கான்பரன்ஸ்
பாஜகவும் ஆன்லைன் பிரச்சாரத்தையே நம்பி உள்ளது.. அந்த வகையில், காணொலி மூலம் இன்று பிரதமர் மோடி பேசும்போது, வழக்கம்போல் அகிலேஷ் யாதவை குறி வைத்து பேசினார்.. குறிப்பாக மெய்நிகர் பேரணி மூலம் பிரதமர் உரையாற்றியது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்...

உத்தரபிரதேசம்
பிரதமர் உரையில், "உத்தரபிரதேசத்தில் மாற்றத்தை அமைக்க கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம்.. இங்குஉருவாக்கப்படும் ஆக்சிஜன் ஆலைகள், விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டுவதற்கான புதிய வழியை ஏற்படுத்தும்.. அதேபோல, விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.. இந்த இலக்கை தற்போது அடைந்துள்ளோம்.

பழிவாங்கல்
இந்த 5 வருடங்களில் உணவு தானிய கொள்முதல் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உள்ளது... இப்படி மாநில வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.. ஆனால், அவங்க சமாஜ்வாடி கட்சியினர் உங்களை பழிவாங்குவதற்கான வாய்ப்பை தேடுகிறார்கள்... காரணம், பழிவாங்குவதுதான் அவர்களின் சித்தாந்தம்.. அன்று இங்கு ஏகப்பட்ட மாபியாக்கள், குண்டர்கள் இருந்தனர்.. சட்டத்திற்கு மேலானவர்கள் என்று தங்களை தாங்களே கருதி கொண்டுள்ளனர்..

உபி பாஜக
ஆனால், இன்று சட்டத்தின் அர்த்தத்தையே அவர்களுக்கு இந்த உபி பாஜக அரசு கற்று தந்துள்ளது.. 5 வருடங்களுக்கு முன்பு, மக்கள் பயந்து கிடந்தனர்.. அவங்களுக்காகவே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயந்து கொண்டு இருப்பிடத்தை மாற்றி கொண்டே இருந்ததாக நாம் தினமும் செய்திகளில் படித்தோம்.. அப்போது, கடத்தல் போன்றவை நடுத்தர வணிகர்களின் வாழ்க்கையையே அழித்துவிட்டது. ஆனால், இந்த 5 ஆண்டுகளில் யோகி அரசு இந்த சூழ்நிலையில் இருந்து மாநிலத்தை மீட்டு கொண்டு வந்துள்ளது..

அட்டகாசம்
கொள்ளையர்கள் அட்டகாசத்தினால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர்.. அப்படி இந்த மாநிலத்தை பிரிக்க நினைத்தவர்களுக்கு பாஜக தக்க பதிலடி தந்துவிட்டது.. அகிலேஷூக்கு தினமும் கிருஷ்ணர் கனவில் வந்து, உபியில் சமாஜ்வாதி ஆட்சிதான் என்று சொல்வதாக கூறுகிறார்.. அவங்க தூங்கி கொண்டே கனவு காணட்டும்.. ஆனால் எப்போதும் விழிப்புடன் இருந்து மாநில வளர்ச்சிக்காக பாடுபடுபவர் யோகி மட்டுமே.. ஆனால், நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது.

அட்டாக்
5 வருடங்களுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் மேற்கு உ.பி.க்கு நான் வந்தபோது, உ.பி.யின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் எந்த விஷயத்தையும் விட மாட்டோம் என்று சொன்னேன்.. இந்த 5 ஆண்டுகளில் யோகிஜியின் தலைமையில், முழு நேர்மையுடனும் உங்களுக்கு சேவை செய்ய உ.பி அரசு முயற்சித்துள்ளது" என்றார். வழக்கம்போல பாஜக இந்த முறை தன்னுடைய பேச்சிலும், அகிலேஷை அட்டாக் செய்ததுடன், அகிலேஷ் ஆட்சியில் குண்டர்கள் நிறைந்த காணப்படுவார்கள் என்ற விஷயத்தை மறக்காமல் பதிவு செய்துள்ளது.. 2 நாட்களுக்கு முன்பு அமித்ஷா இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியும் அதையே பேசி, அகிலேஷின் மீதான போட்டியை பலப்படுத்தி உள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications