வேற லெவல்.. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா.. 3 மாநிலங்களில் மது, இறைச்சி கடைகள் மூடல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசம், சத்தீஷ்கர், அஸ்சாம் ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்படும் என்று என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்ட நாட்கள் சட்ட போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மேலும் பிரதமர் மோடி, கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் இந்த ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

Ram Temple Consecration: 3 states declare jan 22 as dry day

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதை அடுத்து கோவில் கட்டும் பணிகள் விரைவாக தொடங்கி நடந்து வந்தது. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டிடக்கலை நுட்பத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. . மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் பிரமாண்டமாக அமைய உள்ளது.

16ம் தேதி தொடக்க விழா: இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இதுதவிர 3 ஆயிரம் விவிஐபிக்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக குடமுழுக்கு விழாவுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இறைச்சி கடைகள் மூடல்: 22 ஆம் தேதி திறப்பு விழாமை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் நாளில் உத்தர பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுக்கடைகள் அனைத்திற்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் சுற்று வட்டாரம் முழுவதையும் மது இல்லாத பகுதியாக யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய முஸ்லீம் அமைப்பான ஆல் இந்தியா ஜமைதுல் குரோஷ் என்ற அமைப்பு, இறைச்சி கடைகள் அனைத்தும் 22 ஆம் தேதி மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது தவிர அஸ்சாம், சத்தீஷ்கரிலும் ஜனவரி 22 ஆம் தேதியில் மதுக்கடைகள் மூடப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+