ராமர் கோவில் கட்டியது யார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. மக்கள் மத்தியில் உ.பி முதல்வர் யோகி பேச்சு
லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இங்கு மீண்டும் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் நம்பிக்கையுடன் இப்போது இருந்தே இதற்கான பணிகளை தொடங்கி விட்டது.

பா.ஜ.க.வின் ஆதிக்கம் இருக்குமா?
இதற்காக காங்கிரசின் பிரியங்கா காந்தி ஏற்கனவே உ.பி.யில் முகாம் முகாமிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னின்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார். இப்படி எதிர்கட்சிகளின் வேகம் அதிகமாக இருக்க இந்த முறை உ.பி.யில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக...
உ.பி.யில் கொரோனா கோலோச்சிய நேரத்தில் முதல்வர் யோகி அதனை சரியாக கையாளவில்லை என்று மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி இப்போதும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நின்றனர்.

பதிவு செய்து விட்டார்
ஒரு கட்டத்தில் யோகி கண்டிப்பாக அடுத்த முதல்வர் வேட்பாளாராக இருக்க மாட்டார் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. உடனடியாக சுதாரித்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து அனைத்தையும் தெளிவாக விளக்கி அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதையும் பதிவு செய்து விட்டார்.

அயோத்தி ராமர் கோவில்
ஒருபக்கம் விவசாயிகளும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட முடிவெடுத்துள்ள நிலையில், எதிர்கட்சிகளும் பலமாக நிற்கின்றன. இதையெல்லாம் சமாளித்து வாக்குகளை அறுவடை செய்ய முதல்வர் யோகியும், உ.பி பா.ஜ.க.வினரும் அயோத்தி ராமர் கோவிலை கையில் எடுத்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அதனை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

சிந்தித்து பாருங்கள்
மதுராவில் நேற்று பொதுமக்களிடம் உரையாற்றிய யோகி ஆதித்யநாத் ராமர் கோவிலை வைத்தே பேசினார். ''உங்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி முடிவு செய்வதற்கு முன், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியது யார்? என்று சிந்தியுங்கள். பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இதைச் செய்திருக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 2017-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்' என்று கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications