உ.பி.யில் சமாஜ்வாதி 33.1% வாக்குகள் பெறும்! ஆனால் பாஜகதான் வின்னர்: ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சியும் பி-மார்க் நிறுவனமும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
41% வாக்குகள் மூலம் உ.பி.யில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் எனவும் சமாஜ்வாதி கட்சி 33.1% வாக்குகளை பெறக்கூடும் எனவும் அந்த சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம் முழுவதும் ஜனவரி 5-ம் தேதி தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை 16,390 நபர்களிடம் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 கட்டங்கள்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில் ரிபப்ளிக் செய்தித் தொலைக்காட்சியும், பி-மார்க் நிறுவனமும் இணைந்து நடத்திய சர்வேயில், பாஜக தேர்தலில் அமோக வெற்றி பெறக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதோடு 0.3% வாக்கு சதவீதம் அதிகரிக்கவும் கூடும் என்றும் யோகி ஆதித்யாநாத்தை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அதிகமானோர் விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

2-வது முறை முதல்வர்
யோகி மீண்டும் 2-வது முறை முதல்வராக பொறுப்பேற்று அடுத்த 5 ஆண்டுகாலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டால், உத்தரப்பிரதேச வரலாற்றில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை அவர் அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது. மாயாவதி 7 ஆண்டுகள் உ.பி.யின் முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

வளர்ச்சித் திட்டங்கள்
பூர்வாஞ்சல் பகுதியில் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்த காரணத்தால் பாஜக 83% இடங்களில் வெல்லக்கூடும் என அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலை, பூர்வாஞ்சல் விகாஸ் மாடல், காசி காரிடர், விமான நிலையம், மருத்துவக்கல்லூரி என எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் பாஜகவுக்கு கைகொடுக்கக் கூடும் என சர்வே முடிவுகள் சொல்கின்றன.

பாஜகவுக்கு வாய்ப்பு
இதேபோல் அவாத் பகுதியில் உள்ள 118 சீட்கள் பாஜக 82 சீட்களை வரை வெற்றிப்பெறக் கூடும் என்றும் பந்தல் கண்ட் பகுதியில் உள்ள 19 தொகுதிகளில் 3 முதல் 4 இடங்களை மட்டுமே பாஜக இழக்க நேரிடும் என்றும் மீதமுள்ள அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு எனவும் சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. லக்கிம்பூர் கேரி வழக்கு விவகாரத்தால் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே பாஜகவுக்கு சற்று சரிவு ஏற்படக் கூடும் என்றும் அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சமாஜ்வாதி கட்சி
சமாஜ்வாதி கட்சியை பொறுத்தவரை 121 இடங்கள் வரை வென்று எதிர்க்கட்சியாக வரக்கூடும் என்றும் காங்கிரஸ் 6 முதல் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறக் கூடும் எனவும் ரிபப்ளிக் தொலைக்காட்சியும் பி மார்க் நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்தவரை 8 முதல் 16 இடங்களில் வெற்றி பெற்று 13% வாக்குகளை பெறக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளன.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications