ராம ராஜ்ஜியம் அமைப்போம்.. ராமர் கோவில் திறப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முழக்கம்
லக்னோ: ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் ராம ராஜ்ஜியம் அமைப்போம் என தெரிவித்து உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலை திறந்து வைத்தார். கோயில் உள்ளே சென்று கும்பாபிஷேகத்துக்கான பிரான பிரதிஷ்டை பூஜையை அவர் செய்தார். அவருக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் அமர்ந்து பூஜை செய்தார். பூஜை நிறைவடைந்த பின் அங்கு குழுமி இருந்த பக்தர்கள், சிறப்பு அழைப்பார்கள் முன் மோகன் பகதவ் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இன்று அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை நடைபெற்று உள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இதன் மூலம், இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டு உள்ளது. ராமர் கோயில் என்பது இந்தியாவின் அடையாளமாகும். இந்த கோயில் இந்தியாவின் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் அமைதியின் அடையாளமாகும். ராமர் கோயில் பிரதிஷ்டை என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு.
இந்த நிகழ்வின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். ராமர் கோயில் பிரதிஷ்டை இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய தொடக்கமாகும். இந்த நிகழ்வின் மூலம், இந்தியா உலகின் ஒரு முன்னணி நாடாக உருவாகும் என்று நம்புகிறேன். அன்புள்ள அயோத்தி மக்களே, ராமர் கோயில் பிரதிஷ்டை என்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. ஆனால், இந்த நிகழ்வின் மூலம், நாம் செய்ய வேண்டிய சில கடமைகளும் உள்ளன.
முதலாவதாக, நாம் நல்லொழுக்கத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். 2 வது நாம் நமது நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். 3 வது, நாம் உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இந்த கடமைகளை நாம் நிறைவேற்றினால், இந்தியா ஒரு சிறந்த நாடாகும். இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் இதற்காக விரதம் இருந்ததாக கேள்விப்பட்டேன். மோடியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் மிகவும் வயதான துறவி, தவம் செய்வது நம்முடைய பொறுப்பாகும்.
500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் சிலை இங்கு வந்து உள்ளது. ராமர் முதலில் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றுவிட்டு திரும்பினார். தற்போது 500 ஆண்டுகள் கழித்து வந்து உள்ளார். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் உட்சபட்ச மரியாதையை நாம் வழங்க வேண்டும். அவர்களால்தான் இந்த பொன் நாளை அடைந்து உள்ளோம். இந்த ராமர் சிலை அனைத்து துன்பங்கள், வலிகளையும் அழித்துவிடும். இந்த நிகழ்வு புதிய இந்தியாவின் அடையாளமாகும். ஏழைகளுக்காக அரசு கடுமையாக உழைத்து வருகிறது. ராம ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications