தேடி வந்த யோகி.. காத்திருக்க வைத்த ஆர்எஸ்எஸ்.. மீன் செதில் போல நொறுங்கிடுச்சே.. அரண்டு நிற்கும் பாஜக
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனான மீட்டிங்கை 2 முறை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உ.பி., மாநிலம் கோரக்பூரில் உள்ளார். இந்நிலையில் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை இந்த சந்திப்பு குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் நேற்று முதல்நாள் ஜூன் 16ம் தேதி கோரக்பூரில் இந்த சந்திப்பு நடைபெற இருந்தபோது இருவரும் சந்திக்க முடியாமல் போனது. இதையடுத்து நேற்று சந்திப்பிற்கான பிளான் போடப்பட்டது.
பாஜக ஆர்எஸ்எஸ் மோதல்: ஆனால் நேற்று இந்த சந்திப்பின் நேரம் இரண்டு முறை மாற்றப்பட்டது. முதலில் இந்த கூட்டம் பிற்பகல் வரையும் பின்னர் மாலை வரையும் ஒத்திவைக்கப்பட்டது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனான மீட்டிங்கை 2 முறை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இவரை சந்திக்கவே யோகி லக்னோவில் இருந்து கோரக்பூர் சென்றார்.
ஆனால் இப்போது வரை இருவருக்கும் இடையில் மீட்டிங் இறுதி செய்யப்படவில்லை. மோகன் பகவத் யோகியை காத்திருக்க வைத்துள்ளார். ஏன் இப்படி ஒரு சஸ்பென்ஸ். வெவ்வேறு நேரங்கள் இருந்தும் இந்த சந்திப்பு ஏன் நடக்கவில்லை. இதற்கு தகுந்த காரணமோ பதிலோ கிடைக்கவில்லை.
உத்தர பிரதேச பாஜக மீது,யோகி மீது, நட்டா, மோடி மீதெல்லாம் ஆர்எஸ்எஸ் கோபத்தில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் லோக்சபா தேர்தலின் போது மாநிலத்தில் பா.ஜ.,வின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, முதல்வர் யோகி மற்றும் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்று மோடி உத்தர பிரதேசம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்தான், யோகி ஆதித்யநாத் உடனான மீட்டிங்கை 2 முறை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவை தேசிய அளவில் இந்த சம்பவம் அலற வைத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்: பாஜகவில் நடக்கும் தேசிய அளவிலான மாற்றங்கள் அந்த கட்சியினரையே குழப்பி உள்ளது. பாஜகவிலேயே அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் நிர்வாகிகள் குழம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பாஜகவின் தேசிய அளவிலான தோல்விக்கு பொறுப்பேற்று நட்டா பதவி விலக போகிறார். அதேபோல் தேர்தலை முன்னின்று கவனித்த அமித் ஷாவும் அமைச்சரவையை மட்டும் கவனிக்க வேண்டும் என்ற உத்தரவுடன் ஓரம்கட்டப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இனி பாஜகவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் இருக்கும். ஆர்எஸ்எஸ் இல்லாமல் உத்தர பிரதேசத்தில் கூட ஜெயிக்க முடியாது என்பதை பாஜக நிரூபித்துவிட்டது. இந்த நிலையில்தான் புதிய தலைவர் தேர்விலும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.ஆர்எஸ்எஸ் சார்பாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அமைச்சர் ஆகிவிட்டார். எனவே அவரும் அவுட். இதனால் பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் தலைவருக்கான லிஸ்டில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது போக ஆர்எஸ்எஸ் 3 பேர் கொண்ட லிஸ்ட் ஒன்றையும் தயார் செய்து உள்ளதாம். அவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக தலைவர் ஆவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications