லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக சதி.. டெல்லியில் என் ஹெலிகாப்டரை நிறுத்திட்டாங்க.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

ஹெலிகாப்டரில் செல்ல பாஜக அனுமதிக்கவில்லை என்று அகிலேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: இன்று, டெல்லியில் இருந்து முசாபர்நகருக்கு ஹெலிகாப்டரில் செல்ல தன்னை அனுமதிக்கப்படவில்லை என்று அகிலேஷ் யாதவ் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன.
பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

 7 வருடமாக.. பிஞ்சு சிறுமியை.. ஒரே அறையில் அடைத்து வைத்து இருந்து கொடூர தந்தை.. என்ன காரணம்? 7 வருடமாக.. பிஞ்சு சிறுமியை.. ஒரே அறையில் அடைத்து வைத்து இருந்து கொடூர தந்தை.. என்ன காரணம்?

மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது... எனினும், பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

 அகிலேஷ்யாதவ்

அகிலேஷ்யாதவ்

இதுவரை கள நிலவரத்தை பார்க்கும்போது, உபியின் பல்வேறு பகுதிகளில் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவுகள் பெருகி வருவதாக கூறப்படுகிறது.. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில், பெரும்பாலும் பாஜகதான் வெற்றி வாகை சூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு பன்மடங்காக பெருகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. அதனால்தான், அடிமட்ட அளவுக்கு கீழே இறங்கி பாஜக மேலிட தலைவர்களும் வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் நிலைமை வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 அகிலேஷ்

அகிலேஷ்

மேலும் எங்கு சென்றாலும் அகிலேஷ் மீதான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் பாஜக மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.. இன்று பிற்பகல் தனது ஹெலிகாப்டரில் டெல்லியில் இருந்து உபியின் முசாபர்நகருக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

 இந்தியில் ட்வீட்

இந்தியில் ட்வீட்

இது தொடர்பாக ஒரு ட்வீட்டை ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.. அதில், "என்னுடைய ஹெலிகாப்டர் எந்த காரணமும் இல்லாமல் டெல்லியில் நிறுத்தப்பட்டுள்ளது... அது உபியில் உள்ள முசாபர்நகருக்கு பறக்க அனுமதிக்கப்படவில்லை... அப்படி செய்வதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவுமில்லை.. ஆனால் ஒரு பாஜகவின் உயர்மட்ட தலைவர் மட்டும் இங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக விரக்தியில் உள்ளது.. அதற்கு ஒரு உதாரணம் தான் இது..

Recommended Video

    போராடும் BJP ஆட்சியை பிடித்தே தீருவோம் | Uttar Pradesh Election 2022 | Oneindia Tamil
    பரபரப்பு

    பரபரப்பு

    ஆனால், மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. மக்களுக்கு எல்லாம் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.. அத்துடன், தடுத்து நிறுத்தப்பட்ட தன்னுடைய ஹெலிகாப்டர் முன்பு, நின்று கொண்டிருக்கும் தன்னுடைய போட்டோவையும் ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார்.. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அகிலேஷ் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு உபியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Stranded in delhi not being allowed to fly for muzaffarnagar, alleges Akhilesh Yadav
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X