உத்தர பிரதேசத்தில் திடீர் வன்முறை.. கார், வாகனங்களுக்கு தீ வைத்த பீம் ஆர்மி அமைப்பினர்!
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆசாத் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் அறிந்து அவரது பீம் ஆர்மி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சந்திரசேகரின் பீம் ஆர்மி அமைப்பினர் நேற்று திடீரென கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசாத் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான சந்திரசேகர் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தவறான தகவல் காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது ஆசாத் சமாஜ் கட்சி. இதன் தேசிய தலைவராக உள்ள சந்திரசேகர் பீம் ஆர்மி என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் தலித் இளைஞர்களை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை சந்திக்க சென்றபோது கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
இதனால் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று 5 மணி நேரம் இந்த கலவரம் நடந்தது. சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக வெளியான ஒரு தவறான தகவலே இந்த வன்முறைக்கு காரணம் ஆகும். அவரது ஆதரவாளர்கள் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். பல வாகனங்களை சாலையில் கவிழ்த்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இந்த வன்முறையின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications