'டாப்பில்' உ.பி.. அதுவும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில்.. காரணம் யார் தெரியுமா.. பூரிக்கும் பாஜகவினர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டிருந்ததால்தான் இரண்டாவது 5 ஆண்டுக்கு யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை யாரும் இரண்டாவது முறைாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. அதாவது எந்த முதலமைச்சரும் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்ததில்லை. இப்படி இருக்கையில், யோகி ஆதித்யநாத் இந்த சாதனையை முறியடித்து இரண்டாவது முறை முதலமைச்சராக தேர்வாகியுள்ளார். இதனை அம்மாநில பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களை இந்த 6 ஆண்டுகள் நிறைவையொட்டி தொடங்கப்பட்டுள்ளன.

இப்படி இருக்கும் நிலையில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜகவினர் தங்களது கருத்தை வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதாவது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதால்தான் மீண்டும் யோகி ஆதித்யநாத்தை மக்கள் முதலமைச்சராக தெர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் பேசியதாவது, "இதற்கு முன்னர் சட்டம் ஓழுங்கு மிகவும் மோசமானதாக இருந்தது. மாஃபியாக்களும், குண்டர்களும்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக மாறிய பின்னர், முதலில் காவல்துறையில்தான் அவர் மாற்றத்தை கொண்டு வந்தார்.
உ.பி காவல்துறையில் போதுமான அளவில் காவலர்கள் இருக்கவில்லை. இரண்டாவதாக ஊழல் இதில் மலிந்து கிடந்தது. அடிப்படை கட்டமமைப்புகள் மிகவும் மோசமானதாக இருந்திருக்கிறது. அரசுக்கும் - காவல்துறையிக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. இதனை யோகி ஆதித்யநாத் சரியாக கணித்துள்ளார். காவல்துறை அதிகாரிகளுடன் அவர் தொடர்ச்சியாக பேசினார். ஊழலை ஒழிக்க அனைவரின் உதவியையும் நாடினார். அதேபோல சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுவதை தவிர இங்கு வேறு எதுவும் பிரதானமானது கிடையாது என்பதை காவல்துறைக்கு எடுத்துரைத்தார். வன்முறை, குற்றச் செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும் அதிகாரத்தை அவர் காவல்துறைக்கு வழங்கினார்.
ஆனால் சமீப காலமாக என்கவுண்டர் குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் வந்துக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்திற்கென என்கவுண்டர் கொள்கை என்று ஒன்று தனியாக கிடையாது. எனவே இது தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை. குற்றவாளிகளை கைது செய்ய முயற்சிக்கும்போது அவர்கள் நடத்தும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும்போதுதான் இந்த அசம்பாவிதங்கள் நடக்கின்றன. எனவே இதனை பெரியதாக பேச வேண்டிய அவசியமில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகளின் தாக்குதுலுக்கு காவல்துறையினர் பயந்திருந்தனர். தற்போது குற்றவாளிகள் பயந்துக்கொண்டிருக்கின்றனர்.
குற்றவாளிகளுக்கு இந்த சட்டம் புரியவில்லை என்று நினைக்கிறேன். அதாவது அவர்கள் ஒரு தோட்டாவை வெளியிட்டால் அதற்கு பதிலாக 10க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் அவர்களை நோக்கி பாயும் என்பது குற்றவாளிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான அதிரடியான நடவடிக்கையால்தான் மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது" என்று கூறுகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications