உன் தியாகத்தை மறக்க மாட்டோம் லவ் ப்ரீத்.. கட்டியணைத்த பிரியங்கா.. கலங்கிய ராகுல்.. அந்த ஒரு போட்டோ!
லக்னோ: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இங்கு நடந்த விவசாய போராட்டத்தின் போது விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையில் பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸின் ஜீப் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். ஆஷிஸ் மீது தற்போது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆஷிஸ்
ஆனால் இன்னும் ஆஷிஸ் கைது செய்யப்படவில்லை. இன்னொரு பக்கம் இங்கு விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்களாக இவர் சிதாபூர் பகுதியில் சிறை வைக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களை சந்திப்பதற்காக லக்னோ வந்தார்.

பிரியங்கா காந்தி
இவர் லக்னோ வந்த பின் மாலைக்கு பின்பாக லக்கிம்பூர் செல்ல இவருக்கும் பிரியங்கா காந்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி சிறை வைக்கப்பட்ட சிதாபூர் பகுதிக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு விடுதலை செய்யப்பட்ட பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி இணைந்து லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை நோக்கி விவசாயிகளை சந்திக்க சென்றனர்.

ராகுல் காந்தி
லக்கிம்பூர் கேரி சென்ற ராகுல் காந்தி முதலில் பாலியா என்ற பகுதியில் கொல்லப்பட்ட விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்தனர். லவ் ப்ரீத் சிங் என்ற விவசாயி கொல்லப்பட்ட 9 பேரில் ஒருவர் ஆவார். இவர் மீதும் ஜீப் ஏறியது குறிப்பிடத்தக்கது. இவரின் வீட்டிற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்றனர். லவ் ப்ரீத் சிங் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி அங்கேயே கலங்கி நின்றார்.

லவ் ப்ரீத் சிங்
லவ் ப்ரீத் சிங்கின் அப்பாவை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அதன்பின் பிரியங்கா காந்தி கொல்லப்பட்டவரின் அம்மாவை கட்டியணைத்து கண்ணீருடன் ஆறுதல் கூறினார். உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று இருவரும் ஆறுதல் கூறினார்கள். பெரும் போராட்டம், கலவரம், மரணங்களுக்கு இடையே பிரியங்கா, ராகுலின் இந்த சந்திப்பு நெகிழ்ச்சி அளிக்க கூடியதாக அமைந்தது. அங்கு இருந்த விவசாயிகள் இந்த காட்சியை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

வைரல்
லவ் ப்ரீத் குடும்பத்தினரை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சந்தித்து கட்டியணைத்து புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. வெறுப்பு பூசிய கலவரங்களுக்கு இடையில் அன்பின் வெளிப்பாடாக நடந்த இந்த சம்பவம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து ட்வீட் செய்த ராகுல் காந்தி, தியாகி லவ் ப்ரீத் குடும்பத்தினரை சந்தித்து துக்கத்தை பகிர்ந்து கொண்டோம். ஆனால் இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.
Recommended Video

போட்டோ
உன்னுடைய தியாகத்தை மறக்க மாட்டோம் லவ் ப்ரீத். என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து அங்கிருந்து ராகுலும், பிரியங்காவும் நிகாசன் டெஹ்ஸில் பகுதிக்கு சென்றனர். அங்கு கொல்லப்பட்ட செய்தியாளர் ராமன் காஷ்யப் வீட்டில் அவரின் குடும்பத்தாரிடம் இரங்கல் தெரிவித்தனர். அதன்பின் அங்கிருந்து தாருகா பகுதிக்கு சென்று கொல்லப்பட்ட நச்சாடர் சிங் என்ற விவசாயியின் வீட்டில் இரங்கல் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications