லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலட்சியத்தின் உச்சம்..2-ம் வகுப்பு மாணவியை பள்ளியிலேயே அடைத்துவிட்டு சென்ற ஆசிரியர்கள்..உபியில் தான்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை பள்ளி வகுப்பறையிலேயே வைத்து ஆசிரியர்கள் அடைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள செக்டா பிர் என்ற பகுதியில் சன்விலியன் வித்யாலாயா என்ற பள்ளிக்கூடம் உள்ளது.

இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேற்க உங்களது..கிழக்க எங்களது! வந்ததே 3 பேரு..மாவட்டத்தை பிரித்து கொடுத்த ஓபிஎஸ்! கடுப்பான ர.ர.க்கள்மேற்க உங்களது..கிழக்க எங்களது! வந்ததே 3 பேரு..மாவட்டத்தை பிரித்து கொடுத்த ஓபிஎஸ்! கடுப்பான ர.ர.க்கள்

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

இந்த சூழலில், செக்டா பிர் பகுதியில் ஊரக அளவிலான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் முன்கூட்டியே பள்ளியில் இருந்து கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கும் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் அனைவரும் வழக்கமான நேரத்தை விட சீக்கிரமாக வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

 சிறுமியை தேடி அலைந்த பெற்றோர்

சிறுமியை தேடி அலைந்த பெற்றோர்

இந்த நிலையில், 2 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வராததால் பெற்றோர் அவளை தேட ஆரம்பித்து இருக்கின்றனர். அருகில் உள்ள இடங்களில் எல்லாம் தேடி அலைந்து விட்டு பெற்றோர் பதறிப்போயினர். ஆனால் அவளது சக மாணவ மாணவிகளிடம் விசாரித்த போது பள்ளியில் இருந்து சிறுமி எங்களோடு வரவில்லை என்று கூறியிருக்கின்றனர். இதனால் சிறுமியின் பெற்றோர் பள்ளியிலும் தேடத்தொடங்கியிருக்கின்றனர்.

 வகுப்பறையில் சிறுமி...

வகுப்பறையில் சிறுமி...

அப்போது பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்து அழுகுரல் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு ஓடிச்சென்று சிறுமியின் பெற்றோர் பார்த்தனர். அப்போது அந்த வகுப்பறையில் சிறுமி அழுதுகொண்டிருந்தாள். இதையடுத்து பள்ளியின் அதிகாரிகளை வரவழைத்து சிறுமி மீட்கப்பட்டாள். பள்ளியில் வைத்து சிறுமியை அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் தீயாக பரவியது.

தேர்தல் பணிகளில்..

தேர்தல் பணிகளில்..

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்கையில், செக்டா பிர் பகுதியில் ஊரக அளவிலான தேர்தல் நடைபெற்றதாகவும், இந்த தேர்தல் பணிகளில் பங்கேற்பதற்காக ஆசிரியர்கள் முன்கூட்டியே பள்ளியில் இருந்து கிளம்பி விட்டனர் என்றும்.. பள்ளியின் தலைமை ஆசிரியரும் முன்கூட்டியே சென்றுவிட்டார் என்றும்... பள்ளியில் இறுதியாக உதவியாளர்கள் 2 பேர் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

 இடைநீக்கம்

இடைநீக்கம்

இந்த விவகாரம் மூத்த கல்வி அதிகாரிக்கு தெரியவர அவர், ஆசிரியர்களின் இந்த செயல் மிகவும் அலட்சியமானது என்று தெரிவித்தார். மேலும் அவர் சிறுமியை பள்ளியில் வைத்து அடைத்து சென்ற சம்பவத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 4 அசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் இருவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பள்ளியில் சிறுமி அடைத்து வைக்கப்பட்ட இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

English summary
In a school in Uttar Pradesh, a girl studying in class 2 was locked up in the school classroom by the teachers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X