காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க புது திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்ற அம்மாநில அரசு 'முதலமைச்சரின் கெத் சுரக்ஷா யோஜனா' எனும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இன்றும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்க உள்ளதால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் காடுகள், மலைகளை ஒட்டியுள்ள வேளாண் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க புதிய திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்.

'முதலமைச்சரின் கெத் சுரக்ஷா யோஜனா' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் விளைபொருட்கள் பாதுகாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ₹1.43 லட்சம் மானியமாக அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் வரைவு வேளாண் துறையால் தயாரிக்கப்பட்டு, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க 12 வோல்ட் மின்னோட்டத்துடன் கூடிய சூரிய மின் வேலி அமைக்கப்படும். இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை ₹75 கோடியில் இருந்து ₹350 கோடியாக உயர்த்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சோலார் கம்பி வேலி விலங்குகளுக்கு லேசான அதிர்ச்சியைக் கொடுக்கும், அவைகளுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. ஏதாவது ஒரு விலங்கு வேலியைத் தொட்டால் உடேனே சைரன் ஒலிக்க தொடங்கிவிடும். எனவே விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடிவிடும். இதன் மூலம் பயிர்கள் பாதுகாக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications