அலறவிடும் சீனா.. நடுங்கி கிடக்கும் நாடுகள்.. மேஜர் உத்தரவை பிறப்பித்த இங்கிலாந்து.. வேற வழியேயில்லை
லண்டன்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் விழிபிதுங்கி கிடக்கின்றன.. தொற்றை தடுப்பதற்கான முயற்சிகளில் ஒவ்வொரு நாடுகளும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.. இந்நிலையில், இங்கிலாந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, சில அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தடுப்பூசி காரணமாக ஓரளவு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது பிஎஃப்-7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை எதிர்த்து போராடும் அளவு நம்முடைய தடுப்பூசிகள் வீரியம் கொண்டவையல்ல என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. அதாவது சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவை தொடர்ந்து பல நாடுகள் இதே போன்று அறிவிப்பை வெளியிட தொடங்கின.

ஜனவரியிலிருந்து கட்டாயம்
தற்போது இங்கிலாந்து அரசும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவிட்-19 ப்ரீ-டிபார்ச்சர் டெஸ்டை (PDT) எடுத்திருக்க வேண்டும் என்றும், இந்த டெஸ்டில் இவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்திருக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த விதிகள் ஜனவரி 5ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வேல்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக விமான சேவை கிடையாது. இருந்தாலும் சீனாவிலிருந்து வெவ்வேறு நாடுகளின் வழியாக வரும் சீன பயணிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சீனா
ஏற்கெனவே சீனாவில் 'Zero-Covid' கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக இது விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக தொற்று பாதிப்பு சீனாவில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. எனவேதான் பல்வேறு நாடுகள் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இங்கிலாந்து அறிவித்துள்ள இந்த கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் ஸ்டீவ் பார்க்லே கூறுகையில், "அடுத்த வாரம் தொற்று பாதிப்பு சீனாவில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தற்காலிக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

அடுத்த ப்ளான்
இங்கிலாந்தை பொறுத்த வரையில் இந்த அறிவிப்பானது முதற்கட்டம்தான். அடுத்த கட்டமாக சீனாவிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 8ம் தேதி முதல் சீனாவிலிருந்து வருபவர்கள் PDT நெகட்டிவ் சான்றிதழை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிலும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து சுகாதாரத்துறை கண்காணிப்பில் இருப்பார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

பிரான்ஸ் கூட
இங்கிலாந்தை தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதேபோல சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறும் தங்களுடைய மக்களுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது. தற்போது வரை சீனாவில் 19 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,242 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையானது இதை விட அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications