லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி.சட்டசபைத்தேர்தல்: நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு... 61 தொகுதிகளில் மோதும் 692 வேட்பாளர்கள்

உத்தரபிரதேச சட்டசபைக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஞாயிற்றுக்கிழமை 61 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

லக்னௌ: உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளைய தினம் 61 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேற்று மாலை 6மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு 7 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே பிப்ரவரி 10, 14, 20, 23 ஆகிய தேதிகளில் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை 27ஆம் தேதி 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

UP Assembly Election 2022:Fifth Phase of Voting on Sunday, 692 Candidates in Fray for 61 Seats

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒவைசி கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், அங்கு பலமுனை போட்டி நிலவி வருகிறது.

5வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி என முக்கிய தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அயோத்தி தொகுதியை கைப்பற்றுவதில் பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

61 தொகுதிகளுக்கு நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 692 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ந்தேதியும் 7வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம்தேதியும் நடைபெற உள்ளது.

கூவிக்கூவி அழைத்தும் பாஜகவுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை! இதில் வியாக்கியானம் பேசுவதா? -காங்கிரஸ்கூவிக்கூவி அழைத்தும் பாஜகவுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை! இதில் வியாக்கியானம் பேசுவதா? -காங்கிரஸ்

English summary
The fifth phase of polling for the Uttar Pradesh state assembly is scheduled to take place tomorrow in 61 constituencies. 692 candidates are in the fray. Heavy security has been put in place ahead of the polls ahead of the polls. Auxiliary troops are concentrated in tense polling stations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X