"ரவுடிகள் ராஜ்யத்தை உ.பி மக்கள் மீண்டும் ஏற்க மாட்டார்கள்.." விளாசி தள்ளிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விரைவில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று (பிப்.10) நடந்து முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 60% வாக்குகள் பதிவாகி இருந்தது.

இதற்கிடையே இரண்டாம் கட்ட தேர்தல் 55 தொகுதிகளில் வரும் பிப். 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ள நிலையில், அங்குக் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 312 இடங்களில் வென்று மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதேபோன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. மேலும், இதற்காக பாஜக தலைவர்கள் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் முகாமிட்டு தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

குறிப்பாக, பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரணாசி தொகுதி உபி-இல் தான் உள்ளது. எனவே, இதை இமேஜ் விஷமாகவும் கருதும் பிரதமர் மோடி, உ.பிக்கு நேரடியாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழலில் அங்கு காஸ்கஞ் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரிய பிரதமர் மோடி, சமாஜ்வாடி கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாகவும் அங்கு குடும்பத்தினருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் சாடினார்.

 ரவுடிகள் ராஜ்யம்

ரவுடிகள் ராஜ்யம்

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் தங்களுக்குத் தோல்வியைத் தான் தரப்போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால் தான் இப்போது அவர்கள் வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். உ.பி. மக்கள் அவர்களையும் அவர்களின் ரவுடிகள் ராஜ்யத்தையும் மீண்டும் ஒரு முறை ஏற்கத் தயாராக இல்லை என்பதே உண்மை.

 யோகிக்கு பாராட்டு

யோகிக்கு பாராட்டு

சமீபத்தில் மறைந்த மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் பெயரில் பிலிம் சிட்டியில் மியூசிக் அகாடமி அமைக்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதற்காக நான் முதல்வர் யோகியை வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்த கட்டமாக அங்கு பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள் உட்பட 55 தொகுதிகளில் வரும் பிப். 14ஆம் தேதி நடைபெறுகிறது.

 தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

உபி தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துக் களமிறங்குகிறது. அதேபோல தனித்துக் களமிறங்கும் காங்கிரஸ், பல ஆண்டுகளுக்குப் பின்னர் மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இது தவிர மேலும் சில கட்சிகள் களத்தில் இருந்தாலும் கூட, ரியல் போட்டி என்பது பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான்! கடைசியாக வெளியான கருத்துக் கணிப்புகளிலும் கூட கடும் போட்டி நிலவும் என்றே கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+