உ.பி தேர்தல்...தொடர் பிரச்சனைகள்- களத்தில் கலக்கும் பிரியங்கா, அகிலேஷ் யாதவ்- நெருக்கடியில் யோகி!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு தலைவலியாக புதிய புதிய விவகாரங்கள் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன. இதனை லாவகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பயன்படுத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர்கள் பட்டாளத்தையே களமிறக்கி இருக்கிறது பாஜக. இம்மாநிலத்தில் தேர்தலில் ஜாதிய வாக்குகள் முதன்மையான பங்கு வகிக்கின்றன.
அதனால் ஒவ்வொரு கட்சியும் ஜாதிகளின் வாக்குகளை அறுவடை செய்வதற்கான வியூகம் வகுத்து கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த தேர்தலில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

உ.பி.யில் விவசாயிகள் பிரசாரம்
ஏற்கனவே டெல்லியில் போராடும் விவசாயிகள் உ.பி. தேர்தல் களத்தில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆளும் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் கோட்டையிலேயே இந்த பிரசாரம் அனலடித்தது. இந்த நிலையில் உ.பி.யில் எந்த ஒரு சிறிய நிகழ்வாக இருந்தாலும் உடனே பிரியங்கா காந்தியும் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் ஆம் ஆத்மி கட்சியினரும் போட்டி போட்டு கோதாவில் குதித்து விடுகின்றனர்.

பிரியங்கா முதல்வர் வேட்பாளரா?
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியானது பிரியங்கா தலைமையில்தான் தேர்தலை சந்திக்கிறது. பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சியினரின் எதிர்பார்ப்பு. ஆனால் இதுவரை முதல்வர் வேட்பாளர் குறித்து பிரியங்கா காந்தி எந்த பதிலும் சொல்லவில்லை. காங்கிரஸ் மேலிடமும் கருத்து தெரிவிக்கவில்லை. அண்மையில் உ.பி கோரக்பூர் ஹோட்டல் ஒன்றில் கான்பூர் மணீஷ்குமார் என்ற தொழிலதிபர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கான்பூர் தொழிலதிபர் அடித்து கொலை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, பாஜக ஆட்சியில் காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் உள்ளன என சாடினார். மேலும் மணீஷ் குப்தாவின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் பிரியங்கா. தற்போது லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திலும் பிரியங்கா களமிறங்கி இருக்கிறார். லக்கிம்பூரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பத்திரிகையாளர் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தால் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தடுக்கப்பட்ட பிரியங்கா
லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க இரவோடு இரவாக புறப்பட்டார் பிரியங்கா. இன்று காலை பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை உரத்த குரலில் பிரியங்கா மிரட்டியிருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிரியங்கா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் உக்கிர போராட்டங்களில் குதித்துள்ளனர். பிரியங்கா களத்தில் இருப்பதைப் போல அகிலேஷ் யாதவும் நிற்கிறார்.

யோகிக்கு நெருக்கடி
லக்கிம்பூர் செல்ல திட்டமிட்ட அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இன்று காலை முதலே அகிலேஷ் யாதவ் வீடு முன்பாக பெரும் எண்ணிகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை தீ வைத்தும் எரித்தனர். அகிலேஷ் வீடு முன்பாகவே இந்த சம்பவம் நிகழ்ந்தது. அதேபோல் மாயாவதியும் நீதி விசாரணை கோரி குரல் கொடுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியினரும் லக்கிம்பூர் செல்ல முயன்றனர். மேலும் சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகலும் உ.பி.செல்ல முயன்றார். பஞ்சாப் துணை முதல்வரும் உ.பி.க்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் அனைவருக்கும் உ.பி. பாஜக அரசு அனுமதி தரவில்லை. உ.பி. சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரச்சனைகல் தலைதூக்குவதும் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து இடைவிடாமல் போராடுவதும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications