48 ஆண்டுகள்.. 1975-ல் இந்திரா எமர்ஜென்சி அறிவித்த நாள்- உ.பி.யில் கறுப்பு தினம் கடைபிடிக்கும் பாஜக!
லக்னோ: 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை எனப்படும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட நாளை இன்று உத்தரப்பிரதேச மாநில பாஜக கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.
1971-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலில் உ.பி. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்திராவின் வெற்றியை எதிர்த்து ராஜ்நாராயணன், அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இந்திரா காந்தி வென்றது செல்லாது என 1975 ஜூன் 12-ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அத்துடன் இந்திரா காந்தி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. அதே கால கட்டத்தில் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து 1975-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி இந்தியாவில் அவசரநிலை - எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது. 1971-ல் இந்திரா அரசு கொண்டு வந்த ஒடுக்குமுறை சட்டமான மிசா முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டது. 1976-ல் தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தாக்குதலுக்குள்ளாகினர். தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சியில் சிறை தண்டனை அனுபவித்தவர்.
நாட்டில் எமர்ஜென்சி 2 ஆண்டுகள் அமலில் இருந்தது. அதன் பின்னர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை விலக்கிக் கொண்டார். 1977-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு ஜனதா அரசாங்கம் அமைந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் தாக்கு பிடிக்கவில்லை.
இந்திரா காந்தி அவசரநிலையை பிறப்பித்த நாளான இன்று உத்தரப்பிரதேச மாநில பாஜகவினர் மாநிலம் தழுவிய அளவில் கறுப்பு தினமாக கடைபிடிக்கின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்களையும் பாஜக இன்று நடத்துகிறது. இதேபோல நாட்டின் பல மாநிலங்களில் எமர்ஜென்சியின் 48-வது ஆண்டை நினைவுகூறும் நிகழ்வுகளை பாஜக நடத்த உள்ளது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications