பாம்பு கடித்து இறந்த சிறுவனை.. உயிர்பிக்க 3 நாட்களாக பசு சாணத்தில் மூடி வைத்த உறவினர்கள்! ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாம்பு கடித்து இறந்த சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க, சிறுவனின் உடலை 3 நாட்களாக வேப்பிலை மற்றும் பசு சாணத்தில் உறவினர்கள் மூடி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள இட்டர்னி கிராமத்தைச் சேர்ந்த கபில் ஜாதவ் என்ற சிறுவனை, கடந்த அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி அன்று விஷ பாம்பு கடித்தது. இதனையறிந்த உறவினர்கள் உடனடியாக சிறுவனை உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து சடலத்துடன் வீடு திரும்பிய குடும்பத்தினரிடம், அண்டை வீட்டார்கள் சிலர் மாந்திரீகர்கள் மூலம் கபிலைத் திரும்ப உயிர்ப்பிக்க முடியும் என்று கூறினர். இதை நம்பிய குடும்பத்தினர், மாந்திரீக சடங்குகளுக்காக கபிலின் உடலை மதுராவுக்கு எடுத்துச் சென்றனர். எனினும், அந்த முயற்சி தோல்வியடையவே, உடலை மீண்டும் கிராமத்திற்குக் கொண்டு வந்தனர்.
கடைசி முயற்சியாக, கபிலின் உடலை வேப்ப இலைகள் மற்றும் பசுஞ்சாணத்தால் முழுவதுமாக மூடி, கிராமத்திற்கு வெளியே வைத்தனர். அங்கும் மாந்திரீகர்கள் பல சடங்குகளைச் செய்தனர். மூன்று நாட்களாக, குடும்பத்தினரும் கிராம மக்களும் ஒரு மரக்கிளையைக் கொண்டு சிறுவனின் கால்களைத் தட்டி, உயிர் திரும்பும் அறிகுறிகள் தென்படுகிறதா என்று காத்திருந்தனர்.
மூன்று நாட்களாக எந்த அசைவும் இல்லாத நிலையில், வியாழக்கிழமை இரவு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், கபிலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை நரேந்தர் ஜாதவ், "வெள்ளிக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது," என்று கூறியுள்ளார்.
கூலித் தொழிலாளியான நரேந்தர் ஜாதவ், தன் மகன் கிராம அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான் என்றும், அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள் இருப்பதாகவும் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹசயன் காவல் நிலைய ஆய்வாளர் கூறியுள்ளார்.
பாம்பு கடிக்க உடனடி சிகிச்சை மட்டுமே உயிர் பிழைக்க ஒரே வழி. எந்த பாம்பு கடித்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போக வேண்டும். அங்கு கடியின் தீவிரத்தை பொறுத்து மருந்து வழங்கப்படும். நாட்டு மருந்துகள் மூலமாகவோ, பச்சிலை மூலமாகோ பாம்புவிஷத்தை வெளியேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications