கல்லூரி மாணவி உயிருடன் எரிப்பு.. நடுரோட்டில் நிர்வாண நிலையில் கிடந்த கொடூரம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம கும்பல், அதற்கு மாணவி உடன்படாமல் கடுமையாக எதிர்த்ததால் அவரை தீ வைத்து எரித்துள்ளது. நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவில் ஒரு தலைக்காதலால் விஷம் கொடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இன்னொரு மாணவி உயிருக்கு போராடியபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி படுகாயம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஷஜகான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார் . அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

என்ன நடந்தது
இது தொடர்பாக போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்தார். அவர் கூறுகையில். ராய்கேடா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 3 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அது தோல்வி அடைந்ததால் அவர்கள் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை
போலீசார் மாணவியின் கல்லூரியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியின் செல்போன் அழைப்புகளில் உள்ள எண்கள், கல்லூரி நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் வன்கொடுமை
இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் 16 வயது தலித் சிறுமியை கடந்த ஞாயிறன்று கல்லு ராஜ்புத் என்பவர் அடித்து இழுத்துசென்றுள்ளார். பின்னர் அவரது வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை ரோஹித் யாதவ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து உபியில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications