அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தல்.. இப்போதே வியூகங்கள் அமைக்க தயாராகும் கட்சிகள்!
லக்னோ: தலித்துகள் மற்றும் பிராமணர்கள் மீதான ஒடுக்குமுறையே வரும் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி முன் வைக்கும் என தெரிகிறது.

உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடந்து வரும் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் வரும் 2022 ஆம் ஆண்டோடு முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, "தற்போதைய ஆட்சியில் தலித்துகள் மற்றும் பிராமணர்கள் மீதான அடக்குமுறையே" தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான இடத்தை பிடிக்கும் என மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு நாங்கள் வகுத்த வியூகத்தின் அடிப்படையில் எப்படி பகுஜன் சமாஜ் ஆட்சி அமைத்ததோ அதன்படி தற்போதும் தங்கள் கட்சி செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தலித்துகள் மற்றும் பிராமணர்கள் மீதான அடக்குமுறைக்குள்ளான குடும்பத்தினரை நேரில் போய் சந்திக்கவுள்ளோம். அவர்களுக்கு நீதி கிடைக்க வழி வகை செய்வோம் என்றும் அந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லீம்கள், தலித்துகள், பிராமணர்கள் ஒடுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்படும் என்றும் மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பாஜக அரசை கேள்வி எழுப்பப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாஜக ஆட்சியில் மேற்கண்ட சமூகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்படவில்லை என்றும் பிஎஸ்பி கட்சியினர் தெரிவித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications