பிற மாநிலங்களில் தவிக்கும் உ.பி. தொழிலாளர்கள் ஒவ்வொரு கட்டமாக மீட்பு- தனிமைப்படுத்துதலில் 2 வாரம்
லக்னோ: கொரோனா லாக்டவுனால் பிற மாநிலங்களில் தத்தளித்து வரும் தங்களது மாநில தொழிலாளர்களை ஒவ்வொரு கட்டமாக திரும்ப அழைத்துவர உத்தப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அப்படி அழைத்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்தபட்சம் 2 வாரம் தனிமைப்படுத்தி வைக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Recommended Video
இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கூறியதாவது:

பிற மாநிலங்களில் தவித்து வரும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு கட்டமாக திரும்ப அழைத்துவரப்படுவர்.
உத்தரப்பிரதேச எல்லையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும்.. பின்னர் அழைத்துவரப்படும் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இதனைத் தொடர்ந்தே சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின்னர் அந்த தொழிலாளர்களுக்கு ரூ1,000 உதவித் தொகையும் ரேஷன் பொருட்களும் வழங்கப்படும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இதுவரை 1604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று நோய்க்கு 24 பேர் மரணித்துள்ளனர். கொரோனா பாதித்த 206 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications