மனைவியின் செல்போன் எண்ணை 30 நண்பர்களுக்கு பகிர்ந்த கணவர்.. ஆபாச மெசேஜ்களால் பெண் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் செல்போன் எண்ணை கணவர் தனது 30 நண்பர்களுக்கு அனுப்பிய நிலையில் அவர்கள் அந்த பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியுள்ளது.

கணவர் ஆகாஷ் திருமணமான நிலையிலும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை வேலை வெட்டிக்கு செல்லுமாறு மனைவி அறிவுறுத்தி வந்தார். நாளை குழந்தை உண்டானால் செலவுக்கு என்ன செய்வது, இப்படியே இருந்தால எப்படி என்றெல்லாம் கேட்டுள்ளார்.

கணவர் - மனைவி

கணவர் - மனைவி

இதனால் கணவர்- மனைவிக்கு இடையே அடிக்கட தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஒருமுறை கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆகாஷ் தனது மனைவியை வீட்டை விட்டு துரத்தியுள்ளார. இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஆகாஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் போலீஸில் கொடுத்ததாக தெரிகிறது.

வாபஸ்

வாபஸ்

இந்த நிலையில் அந்த புகாரை வாபஸ் வாங்குமாறு மனைவியிடம் ஆகாஷும் அவரது குடும்பத்தினரும் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு அந்த பெண்மறுத்துவிட்டார். இதனால மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது ஆகாஷ் கடும் கோபமடைந்தார். இதனால் மனைவியை பழிவாங்கத் துடித்தார்.

 மனைவியின் எண்

மனைவியின் எண்

இதற்காக தனது மனைவியின் எண்ணை நண்பர் ஒருவருக்கு கொடுத்து அந்த பெண் ஒரு விபச்சாரி என கூறி புகைப்படத்தையும் அனுப்பினர். மேலும் அந்த நண்பனுடைய மற்ற நண்பர்களுக்கெல்லாம் புகைப்படத்தையும் எண்ணையும் அனுப்பி ஆபாசமாக பேசுமாறு கூறியுள்ளார்.

ஆபாச பேச்சு

ஆபாச பேச்சு

இதையடுத்து அந்த நண்பரும் ஆகாஷின் மனைவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இப்படியே தினமும் ஆபாச மெசேஜ், ஆபாச வீடியோக்களை பெற்றதால் மன உளைச்சல் அடைந்த பெண் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் கணவனே இந்த மோசமான செயலை செய்தது தெரியவந்தது. தன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதற்காகவே இது போன்ற காரியத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது நண்பர்களை அழைத்து அவர்களையும் விசாரித்த போலீஸார், மன்னிப்பு கேட்டதை அடுத்து ஆகாஷையும் நண்பர்களையும் எச்சரித்து அனுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+