திருமண ஊர்வலம்.. கார் சன் ரூஃபை திறந்து குதுகலம்.. உடனே வந்த உ.பி. போலீஸ்.. ரூ.2 லட்சம் அபராதம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் மணமக்களுடன் திருமண ஊர்வலகத்துக்கு காரில் சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேல்கூரைகளை திறந்துவிட்டு ஆட்டம் போட்டதால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கபட்டு இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வுக்காக மணமக்கள் ஆடி காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். சிவப்பு நிற ஆடி காரில் மணமகனும் அவரது நண்பர்களும் மேற்கூரையை திறந்துவிட்டு ஆடிபடி சென்று கொண்டு இருந்தனர். அந்த காருடன் பின்னால் 9 கார்கள் அணி வகுத்து சென்றன.

அவற்றில் பெரும்பாலானவை ஆடி, ஜாகுவார் போன்ற உயர் ரக சொகுசுக்கார்கள்தான். அதில் பயணித்த மணமக்களின் நண்பர்களும் உறவினர்களும் மேற்கூரையை திறந்து நடனமாடியும் கை அசைத்தபடியும் சென்று இருக்கின்றனர். மேற்கூரை இல்லாத கார்களில் ஜன்னல் வழியாக உடல் முழுவதையும் வெளியே காட்டி அலப்பரை கொடுத்து உள்ளனர்.

இதனை வீடியோ எடுத்த அன்கித் குமார் என்ற வாகன ஓட்டி, "ஹரித்துவாரியிலிருந்து நொய்டா செல்லும் வழியில் முசாஃபர்நகர் மாவட்டத்தில் திருமண ஊர்வலம் சென்றவர்கள், தங்களின் கொண்டாட்டத்துக்காக மற்றவர்களின் உயிர்களில் விளையாடுகின்றனர். போக்குவரத்து காவல்துறை இதுகுறித்து நடடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்." என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில். இதுகுறித்து முசாபர்நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வீடியோவில் பதிவான 9 கார்களின் எண்களை போலீஸ் பதிவு செய்தது. கார்களில் ஆடிக்கொண்டு சென்றவர்களுக்கு ரூ.2 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மூத்த எஸ்.பி. அபிஷேக் வர்மா தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications