லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லா வெள்ளிக்கு பின்பும் சனி வரும்.. எச்சரித்த யோகி அரசு! இடிக்கப்பட்ட இஸ்லாமியரின் வீடுகள்! வீடியோ

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய போராட்டக்காரர்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

    Uttar Pradesh போராட்டம் எதிரொலி.. மீண்டும் புல்டோசரால் இடிக்கப்படும் வீடுகள் *India

    பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். நபிகள் நாயகம் குறித்து அவர் தவறாக பேசியது விமர்சனங்களை சந்தித்தது.

    இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கத்தார் உள்ளிட்ட நாடுகள் நுபுர் சர்மாவின் கருத்து தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மத ரீதியிலான மோதல்: ஒரே மதத்தைச் சேர்ந்த 36 பேர் கைதுஉத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மத ரீதியிலான மோதல்: ஒரே மதத்தைச் சேர்ந்த 36 பேர் கைது

     நுபுர் சர்மா

    நுபுர் சர்மா

    இந்த நிலையில் நுபுர் சர்மா கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். வெள்ளிக்கிழமை சரியாக தொழுகை முடித்ததும் போராட்டம் தொடங்கியது. டெல்லி ஜும்மாவில் முதலில் இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்கியது. அங்கு நுபுர் சர்மாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தொழுகை போராட்டம்

    தொழுகை போராட்டம்

    இதையடுத்து இன்னொரு பக்கம் மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் செய்தனர். அவர்கள் மேல் போலீசார் லத்தி தாக்குதல் நடத்தினர். உ. சஹரான்பூர், ராஞ்சி, கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில் போராட்டம் கலவரங்களில் முடிந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது உத்தர பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் 304 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

    கலவரம்

    கலவரம்

    பிரயாக்ராஜில் மட்டும் 91 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சஹரன்பூரில் 71 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கலவரம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகர் மிரிதியுன்ஜே குமார் அளித்த பேட்டியில், பொய்யான கூட்டங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். எல்லா வெள்ளிக்கிழமைக்கு பிறகும்.. ஒரு சனிக்கிழமை வரும் என்பதை மறக்க வேண்டாம் என்று இஸ்லாமிய போராட்டக்காரர்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பான போராட்டத்தை விமர்சித்து உள்ளார்.

    வீடுகள் இடிப்பு

    வீடுகள் இடிப்பு

    இந்த நிலையில்தான் சஹரன்பூர் பகுதியில் இருக்கும் 2 இஸ்லாமியர்களின் வீடுகள் நேற்று இடிக்கப்பட்டன. போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. போலீசார் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. முசாமில் மற்றும் அப்துல் வாக்கிர் ஆகியோரின் வீடுகள் இடிக்கப்பட்டன. இவர்கள் வீட்டின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    இப்படி வீடுகள் இடிக்கப்பட்டதன் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோக்களை பகிர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இவ்வளவு நாள் இவர்கள் நிலத்தை ஆக்கிரமித்தது தெரியாதா? இப்போது இடிப்பது ஏன்? இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள் என்று பலர் வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் பிரக்யாராஜ் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக ஜாவித் முகமது என்பவரின் வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது.

    இஸ்லாமியர்களின் வீடுகள்

    இஸ்லாமியர்களின் வீடுகள்

    போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமான நபர் ஆவார் இவர். ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து உறுப்பினர்கள் வெளியே வர மறுத்த நிலையில் வெளிப்புற சுவர் மட்டும் இடிக்கப்பட்டது. முன்பே இவர்களை வெளியேற சொல்லி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தாலும் அவர்கள் வெளியேற மறுத்தனர். இதனால் இவரின் வீட்டின் முன் பக்கம் மட்டும் இடிக்கப்பட்டது. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

    English summary
    UP Police razed out the houses of Muslim protesters with Bulldozers: Watch Video. உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய போராட்டக்காரர்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X