உ.பி. ஷாக்: ’ஜெய் பெரியார்” முழக்கத்துடன் பிறந்த நாளை கொண்டாடுவதா? வழக்கு போட்ட பாஜக அரசு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடியதற்காக 4 தலித்துகள் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாள் செப்டமப்ர் 17-ந் தேதி எழுச்சியுடன் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி ஆதரவாளர்கள் கொண்டாடினர். பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
உ.பி. மாநிலம் ஹமிர்பூர் என்ற இடத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை தலித் செயற்பாட்டாளர்கள் கடந்த 19-ந் தேதி கொண்டாடினர். இதற்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடிய 4 தலித் செயற்பாட்டாளர்கள் மீது உ.பி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட போலீஸ் முதல் தகவல் அறிக்கையில், ஹமிர்பூர் பெரியார் பிறந்த நாள் விழா கூட்டத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் 295, 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஹர்தெளல் சிங் கூறுகையில், பெரியார் பிறந்த நாளை கொண்டாடியவர்கள் பகுஜன் சமாஜ் அல்லது பீம் ஆர்மியை சேர்ந்தவர்கள் அல்ல. எந்த ஒரு அமைப்பு, கட்சியிலும் உறுப்பினர்களும் அல்ல. தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் தந்தை பெரியாரின் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளவை குறித்தும்தான் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அக்கூட்டத்தில் யாரும் பேசவும் இல்லை. தந்தை பெரியார் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை விவரித்தனர். ஜாதிய, மத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பெரியார் நடத்திய போராட்டங்கள் விவரிக்கப்பட்டன. இதனாலேயே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார். இதனால் பெரியார் பிறந்த நாள் கூட்டம் நடத்தியவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் ஹர்தெளல் சிங் தெரிவித்துள்ளார்.
#jaunpur_up#periyar_jayanti@_YogendraYadav @mkstalin @Udhaystalin @Profdilipmandal @ANI @dvkperiyar pic.twitter.com/aHGdCEsB6j
— Ashvani kumar (@Ashvani_ykumar) September 19, 2023
உ.பி.யில் பெரியார் பிறந்த நாள்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் உள்ளிட்ட இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஜெய் பெரியார் முழக்கத்துடன் இந்த பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications