லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுத்த கொரோனாவை கட்டுப்படுத்த உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு

Google Oneindia Tamil News

லக்னோ: கொரோனாவை கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் 7-வது இடத்தில் இருக்கிறது உத்தரப்பிரதேச மாநிலம். தற்போதைய நிலையில் உத்தரப்பிரதேசத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,66,360.

UP will impose Sunday Lockdown in all districts

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் என அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் வாரணாசியில் புனித கங்கை நதியில் நீராட கும்பமேளா காலம் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தும் வருகின்றனர்.

"ஹாட் லிஸ்ட்".. அடடே அதுக்குள்ளயுமா.. இவங்கெல்லாம் அமைச்சராக போறாங்களாம்.. அப்ப உதயநிதி?

இத்தனைக்கும் மத்தியில் உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

English summary
Uttar Pradesh Govt today has announced that a lockdown on Sunday in all districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X