Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி அரசை கவிழ்க்க பெரிய சதி.. உத்தர பிரதேசத்தில் 5 பேர் அதிரடி கைது.. பின்னணியில் பகீர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 5 பேரை பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வன்முறையை உருவாக்கி மத்திய அரசை கவிழ்க்க சதி செய்தது தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான், மாநிலத்தில் பயங்கராவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஏடிஎஸ் (Anti- Terrorism Squad) எனும் பயங்கரவாத பிரிவு போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

uttar-pradesh-anti-terror-squad-arrests-5-mujahideen-army-men-in-plot-to-topple-union-government

அந்த வகையில் அக்மல் ராஜா, ஷபீல் சல்மானி என்ற அலி ரஜ்வி, முகமது தவ்பிஃக் மற்றும் காசிம் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 4 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் அனதாலி பகுதியை சேர்ந்த முகமது ராஜா என்பவரை ஏடிஎஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் கேரளா மாநிலம் மலப்புரத்தில் பதுங்கி இருந்தபோது சிக்கினார். கடந்த மாதம் 28 ம் தேதி அவர் கேரளாவில் இருந்து லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது கைதாகி உள்ள 5 பேர் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ஏடிஎஸ் போலீஸ் சார்பில் கூறப்பட்டதாவது: உத்தர பிரதேசத்தில் சில மாவட்டங்களில் உள்ளவர்கள் பாகிஸ்தான் அமைப்பினரால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசை வன்முறை மற்றும் ஷரியா சட்டங்களை வைத்து கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கைதான 5 பேரும் ‛முஜாகிதீன் ஆர்மி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர்.

இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். அந்த அமைப்பினரிடம் இருந்து பணம் பெற்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைவாங்கி உள்ளனர். அதனை வைத்து முஸ்லிம் அல்லாத பிற தலைவர்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஆயுதம் வாங்குவதற்கான பணம், முகமது ராஜாவின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. அதன்பிறகு அவர்கள் பல இடங்களில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பி உள்ளது. முகமது ராஜா, தான் மாஸ்டர் மைண்ட் ஆவார். இவர் கிரிமினல் மற்றும் நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+