Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"யாருமே தக்காளியை சாப்பிடாதீங்க.. விலை தானாக குறையும்.." பாஜக அமைச்சர் தந்த குபீர் ஐடியா!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நாடு முழுக்க தக்காளி விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், தக்காளி விலையைக் குறைப்பது குறித்து பாஜக அமைச்சர் பலே ஐடியா ஒன்றைக் கொடுத்துள்ளார்.

நமது நாட்டில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக திடீரென உச்சம் தொட்டுள்ளது. கொட்டி தீர்த்த கனமழை, விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சினை ஆகியவை சேர்த்து தக்காளி விலை உயரக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் தக்காளி விலை ரூ.100 தாண்டியுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

 Uttar Pradesh BJP Minister says if no eat tomato the price will automatically come down

தக்காளி விலை: நாடு முழுவதும் தக்காளி விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், உத்திர பிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து துறை அமைச்சர் பிரதீபா சுக்லா கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது தக்காளி விலை உயர்வதால்.. தக்காளியை வீட்டிலேயே வளர்க்கலாம்.. அப்படி அது முடியவில்லை என்றால் அதைச் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

உத்தரப் பிரதேசத்தில் பாரம்பரிய மரங்களை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தக்காளி விலை உயர்வதாகச் சொல்கிறார்கள்.. மக்கள் அதை வீட்டில் வளர்க்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் தக்காளி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அப்போது விலை தானாகக் குறையும். தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சையும் சாப்பிடலாம்.. தக்காளியை யாருமே சாப்பிடவில்லை என்றால், விலை குறையப் போகிறது..

குபீர் ஐடியா: காய்கறி விலை உச்சம் தொட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.. பேசாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே தக்காளியை நட்டு வளர்க்கலாம்.. அப்படிச் செய்தால் தக்காளி எந்த விலையில் விற்றாலும் உங்களுக்குப் பிரச்சினை இருக்காது. மேலும், எப்போதும் விலை அதிகமாக இருக்கும் காய்கறியை யாரும் சாப்பிடாமல் விட்டுவிடலாம் அப்போது விலை தானாகக் குறையும்

அசாஹி கிராமத்தில் நாங்கள் சத்துணவுத் தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அங்கே பொதுமக்கள் அவர்களே தக்காளியை நடலாம். இதன் மூலம் விலையேற்றத்தில் இருந்து அவர்களைத் தப்பித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

 Uttar Pradesh BJP Minister says if no eat tomato the price will automatically come down

விமர்சனம்: தக்காளி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்கள் தக்காளியைச் சாப்பிட வேண்டாம் என அமைச்சர் சொல்வது சரியானது இல்லை என்றும் அதுவும் குழந்தைகள் ஊட்டச்சத்து துறை அமைச்சரே இப்படிச் சொல்வது சரியான நடைமுறை இல்லை என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தக்காளி விலையைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்குக் குறைந்த விலையில் தக்காளி கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தக்காளி உட்பட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தினசரி விலையைக் கண்காணிக்க உள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

சந்தையில் தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், அரசே நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து அதை மானிய விலையில் தேவையான பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தக்காளி விலை உயர்வு என்பது பொதுமக்களைப் பாதித்தாலும் கூட விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தக்காளியை விற்றே சில வாரங்களில் கோடீஸ்வரன் ஆனவர்கள் எல்லாம் பலர் இங்கு உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+