உ.பி-இல் ஆக்சிஜன் இல்லாமல்.. 10 நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் பலி.. பாஜக எம்எல்ஏ பரபரப்பு கடிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில பாஜக எம்எல்ஏக்களே கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை நாட்டில் தொடங்கிவிட்டதாகவும் அது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீத பேருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்படும். அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களின் உதவி தேவை. டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை
உத்தரப் பிரதேசத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். ஆக்சிஜன் போதிய அளவு இருப்பதாகக் கூறிய அவர், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகப் பொய் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆக்சிஜனே இல்லை
இந்நிலையில், தனது தொகுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்களை உயிரிழக்க விட்டுவிட வேண்டாம் என்றும் கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் வக்கிம்பூர் கோல கோக்ரநாத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத் தனது நண்பர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்,

தேர்தல் முடிவுகள்
அதேபோல மற்றொரு பாஜக எம்எல்.ஏ பிரதாப் சிங் பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். கிராம புறங்களில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் வாக்கு எண்ணிக்கையின்போது மக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு
இதனால் பஞ்சாயத்துத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தள்ளி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முகவர்களும், வேட்பாளர்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ்கள் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நடவடிக்கை
உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைப்பதில்லை, படுக்கைகள் கிடைப்பதில்லை என தொடர்ந்து பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். முன்னதாக, கடந்த சில தினங்களுக்கும் முன் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் உதவி தேவை என ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். உத்தரப் பிரதேச போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications