“வறுமையை ஒழிப்பதில் கல்வி பெரும் பங்காற்றுகிறது” உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: கல்வி என்பது வறுமையை ஒழிப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு புதிய திட்டங்களை யோகி ஆதித்யநாத் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், பள்ளிகளுக்கு எல்இடி டிவி மற்றும் கற்றல் கருவிகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து நேற்று புதுப்பிக்கப்பட்ட 125 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "வறுமை ஒழிப்பில் கல்வி பெரும் பங்காற்றுகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், "நமது மாநில காவல்துறையில் பெண்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. ஒரு சமூகம் முன்னேற வேண்டும் எனில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். தற்போது பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையாக வரதட்சணை இருக்கிறது. இந்த வரதட்சணையை ஒழிக்க வெகுஜன திருமணம் அவசியமாகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் அடிப்படைக் கல்வியில் மாநிலம் பெரிய பாய்ச்சலை எட்டியுள்ளது. மூடப்படும் தருவாயில் உள்ள பல பாடசாலைகள் இந்தக் காலப்பகுதியில் புத்துயிர் பெற்றுள்ளன.
அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன் கற்பித்தல் தரம் ஆகியவற்றில் கணிசமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்னர், அதாவது 2017ம் ஆண்டுக்கு முன்பு, இந்த பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருந்தன. ஆனால் பாஜகதான் கல்வியில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications