Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவூதியில் இருந்து வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்! சகோதரரை காக்க கிட்னி தானம் தந்த பெண்ணுக்கு கொடுமை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வசித்து பெண் தனது சகோதரரின் உயிரை காப்பாற்ற கிட்னி தானம் வழங்கினார். இதுபற்றி அறிந்த கணவர் அந்த பெண்ணிடம் ரூ.40 லட்சம் கேட்டதோடு, சவூதி அரேபியாவில் இருந்து அவருக்கு வாட்ஸ்அப்பில் ‛முத்தலாக்' வழங்கியது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா அருகே பாய்ரியாஹி கிராமத்தில் வசித்து வரும் பெண்ணின் பெயர் தரணும். இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவரின் பெயர் முகமது ரஷித். இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார்.

Uttar Pradesh Man gives triple talaq on whatsapp after she donated kidney to her brother

இந்நிலையில் தான் அந்த பெண்ணின் சகோதரர் முகமது ஷாகீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது கிட்னி செயலிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து தனது சகோதரருக்கு கிட்னி வழங்க தரணும் முன்வந்தார். மேலும் அவர் தனது கிட்னியை சகோதரருக்கு தானமாக வழங்கினார். அவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கிட்னி சகோதருக்கு பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

இதற்கிடையே தான் சகோதரரை காப்பாற்ற தனது கிட்னியை தானமாக வழங்கியதாக அந்த பெண் சவூதி அரேபியாவில் உள்ள கணவர் முகமது ரஷித்திடம் தெரிவித்தார். இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் தனது மனைவியை கடுமையாக திட்டியுள்ளார். அதோடு கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் மனைவி தரணுமிடம் இருந்து ரூ.40 லட்சம் பணம் தரும்படி கேட்டுள்ளார். இந்த பணத்தை தந்தால் மட்டுமே உன்னுடன் சேர்ந்து வாழ்வேன். இல்லாவிட்டால் திருமண உறவை முறித்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.

ஆனால் தரணும் மற்றும் அவரது குடும்பத்தால் பணம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பணம் தர முடியாது என கணவர் முகமது ரஷித்திடம் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து முகமது ரஷித் வாட்ஸ்அப்பிலேயே முத்தலாக் வழங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கண்கலங்கியுள்ளார். மேலும் அவர் உத்தர பிரதேசத்தில் உள்ள கணவரின் வீட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் முத்தலாக் முறை என்பது சட்டவிரோதமானது. இந்தியாவில் முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் சகோதரருக்கு உதவிய பெண்ணுக்கு சவூதி அரேபியாவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் முத்தலாக் வழங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+