கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த உத்தர பிரதேச கணவன்.. காரணம் கேட்டால் ஆடிப்போயிடுவீங்க
லக்னோ: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் இந்தியாவில் பெருகி வருகிறது. பச்சிளம் குழந்தைகளையே, பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்கிறார்கள் என்றால், தாலி கட்டிய கணவனையும் சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொன்றுவிடுகிறார்கள். அந்தவகையில் கள்ளக்காதலுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மொத்த பேரின் கவனத்தையும் குவித்து வருகிறது.
கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு கொடுமை நடந்தது.. அதாவது, அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகியும், கள்ளக்காதலன் சாஹில் சுக்லாவும் சேர்ந்து கொன்று விட்டார்கள்.. பிறகு கணவனின் சடலத்தை 15 துண்டுகளாக வெட்டியிருக்கிறார் மனைவி.. அந்த உடலை காலி டிரம்மில் போட்டு, டிரம்மின் மீது கான்கீரிட் கலவையால் மூடி சமாதியாக்கிவிட்டார்..

அதேபோல, அவுரியாவில், கட்டாய திருமணம் செய்து வைத்ததால், திருமணமான 2 வாரங்களிலேயே தன்னுடைய காதலனுடன் சேர்ந்து தன் கணவரை, இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்துவிட்டார். இப்படி நாளுக்கு நாள் கள்ளக்காதல்கள் காரணமாக, கணவன்மார்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், ஒரு ஆச்சரிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
ராதிகாவின் கள்ளக்காதல்
சந்த் கபிர் நகரில் உள்ளது கடார் ஜாட் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தொழிலாளி பெயர் பப்ளு.. கடந்த, 2017ல் ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பப்ளு வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில், ராதிகாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயம், பப்ளுவுக்கு தெரியவந்தது.. இதனால் ஊருக்கு திரும்பிய பப்ளு, இதுகுறித்து ராதிகாவை கண்டித்தார்.. கள்ளக்காதலில் ஈடுபடுவது தவறு என்றும் கூறினார். ஆனால், ராதிகாவோ, 6 மாதங்களாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும்நிலையில், அந்த இளைஞரை தன்னால் மறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
கள்ளக்காதலனுடன் திருமணம்
உடனே யாரும் எதிர்பார்க்காத நிலையில், ராதிகாவை அவருடைய கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைப்பதாக பப்ளு கிராம மக்களிடம் அறிவித்தார்.. அத்துடன், 2 குழந்தைகளையும் தானே வளர்ப்பதாகவும் கூறினார்.
இதைக்கேட்டு, ராதிகா உட்பட மொத்த பேரும் திகைத்துவிட்டனர்.. கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கிராம மக்களையும் சமாதானம் செய்து, ஒப்புதலை பெற்றார் பப்ளு. இதையடுத்து குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு, மனைவியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். மணமக்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு, தன்னுடைய குழந்தைகளை தன்னுடனேயே பப்ளு அழைத்துச் சென்றுவிட்டார்.
டிரம்மில் சமாதியான கணவர்
இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் குறித்து பப்ளு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சொல்லும்போது, "மனைவியின் கள்ளக்காதலால் எனக்கு ஏற்படக்கூடிய தீங்குகளை, ஆபத்துகளை தவிர்ப்பதற்காகவே நான் அவர்களின் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். சமீப காலமாகவே, கணவர்கள் தங்கள் மனைவிகளால் கொலை செய்யப்படுகிறார்கள்.
அதுவும் மீரட்டில் நடந்த சம்பவத்தை பார்த்ததுமே எனக்கு குலைநடுங்கிவிட்டது. அதனால்தான், நாங்கள் இருவருமே நிம்மதியாக வாழ என்ன வழி என்று யோசித்து, என் மனைவியை அவளுடைய கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
டிரம்மில் கணவனை கொன்று சிமெண்ட் பூசிய பெண்ணை நினைத்து ஆடிப்போன பப்ளு, இப்படியொரு முடிவை எடுத்திருப்பதும், கள்ளக்காதலனுக்கு தன்னுடைய மனைவியை திருமணம் செய்து வைத்திருப்பதும், சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது












Click it and Unblock the Notifications