பிரளயத்தை கிளப்பிய புஷ்கர்.. பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் விரைவில் அமல்! முதல்வர் பேச்சால் பரபர
லக்னோ: உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் கடந்த 15 ஆண்டுகால கனவு திட்டமாக இருந்து வருகிறது பொது சிவில் சட்டம். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதங்களுக்கு முன் அதற்கான பணிகளை தொடங்கியது மத்திய அரசு. இது தொடர்பாக கடிதம் மூலமாகவும் இணையம், ஈ மெயில் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் என்று மக்களிடமும் கருத்து கேட்டது மத்திய அரசு.

பல லட்சக்கணக்கானோர் இதற்காக கருத்து தெரிவித்த நிலையில், கருத்து சொல்வதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்தது. மத்திய அரசு கொண்டு வர முயலும் இந்த பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளும் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் கீழ் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், ஜெயின், பார்ஸி, பௌத்த மதத்தினர் அவரவர் தங்கள் மத சட்டங்களை பின்பற்றி வரும் நிலையில் இதை பொது சிவில் சட்டமாக மாற்றுவது அனைத்து மதத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகிறது.
குறிப்பாக இந்த பொது சிவில் சட்டம் காரணமாக சிறுபான்மையினரின் மத சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்த சட்டத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசு இது தொடர்பாக கருத்து கேட்பதற்கு முன்பே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துவதற்கான குழு அமைத்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும். பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான மதமாகும்.
ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி எழுப்பி இருக்க மாட்டார்கள். ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்திருக்க மாட்டார்கள். முத்தலாக் முறையை ஒழித்து இருக்க மாட்டார்கள். அயோத்தியில் ராம ஜென்ம பூமியை கட்டி எழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பொறுப்பு ஜனவரி 22 ஆம் தேதி முழுமை பெறுகிறது. ராம ஜென்மபூமி போராட்டத்தின்போது சாத்வி ரிதாம்பராவின் பேச்சுக்கள் என்னை ஈர்த்தன." என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications