பாஜகவுக்கு ஆதரவு கிடையாது- பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கவும் இல்லை.. புதிர் போடும் மாயவதி
லக்னோ: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதை தமது கட்சி எதிர்க்கவில்லை; அதேநேரத்தில் பொது சிவில் சட்டத்தை பாஜக திணிப்பதையே எதிர்க்கிறோம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உ.பி. மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொது சிவில் சட்டத்தை நாடு தழுவிய அளவில் உக்கிரமாக எதிர்ப்போம் என ஏற்கனவே முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்திருக்கிறது.

பொது சிவில் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்யக் கூடும் எனவும் தெரிகிறது. அப்படி மத்திய பாஜக அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளும் ஆதரவை தெரிவிக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி முயற்சியை பாஜகவின் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் நகர்வானது தகர்த்துவிடக் கூடியதாகவும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சங்கமிக்காமல் தனித்து இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி, பொது சிவில் சட்டம் தொடர்பான தமது நிலைப்பாட்டை விளக்கி உள்ளார். இது தொடர்பாக மாயவதி கூறுகையில், பொது சிவில் சட்டம் தேவை என்பதை ஆதரிக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. ஆனால் பொது சிவில் சட்டத்தை மத்திய்ட பாஜக அரசு திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக் கூடிய மத்திய அரசின் அணுகுமுறையை எதிர்க்கிறோம். தமது தோல்விகளை மறைக்கத்தான் பாஜக இத்தகைய பொது சிவில் சட்டம் போன்றவற்றை கையில் எடுத்திருக்கிறது. இதனை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்காது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications