ஆச்சரியத்தின் உச்சம்.! உயிர் வாழ்வதற்காக 6 நிமிடங்கள் இறந்த பெண்.. அடுத்து நடந்த அதிசயம்.! சூப்பர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 28 வயது பெண்ணை காப்பாற்ற மருத்துவர்களே 6 நிமிடங்களுக்கு 'இறக்க' வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இது எப்படி சாத்தியம் எனக் கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.

இந்தக் காலத்தில் மருத்துவ அறிவியல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த நூற்றாண்டில் சிகிச்சை அளிக்கவே முடியாது என்ற இருந்த நோய்களுக்கும் கூட இப்போது ஈஸியாக சிகிச்சை தர முடிகிறது.

Why Lucknow hospital made 28-year-old woman to die just to keep her alive

அப்படியொரு சிக்கலான சிகிச்சை முறையில் தான் உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அவரை காக்கவே மருத்துவர்கள் அவரை ஆறு நிமிடம் இறக்க வைத்துள்ள சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

மோசமான பாதிப்பு: உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் ஒரு புதுமையான அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளனர். இதில் சிகிச்சை அளிக்க hypothermic circulatory arrest என்ற முறையைப் பயன்படுத்தி அந்த பெண்ணை ஆறு நிமிடங்களுக்கு உயிரிழந்த நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்காக அவர்கள் நோயாளியின் உடலைக் குறைந்த வெப்பநிலைக்கு எடுத்துச் சென்று குளிர்வித்துள்ளனர். மேலும், அனைத்து உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தை நிறுத்தி, மருத்துவ ரீதியாக இறந்த நிலையை உடலை எடுத்துச் சென்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இதுபோன்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

எங்கே பாதிப்பு: இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் அயோத்தியைச் சேர்ந்த வினிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளமான அயர்த எனப்படும் பெருநாடியில் இவருக்கு குறிப்பிட தகுந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவருக்கு ரத்த நாளச் சுவரில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனைப் பெருநாடி சூடோஅனுரிசம் என்று அழைக்கிறார்கள்.

அவருக்கு 18 மாதங்களுக்கு முன்பு தான் இரட்டை வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் அவருக்குப் பெருநாடி சூடோஅனுரிசம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சில வாரங்களில் அவருக்குப் பாதிப்பு மேலும் மேலும் மோசமானதாக மாறியது. இதனால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.

சிகிச்சை என்ன: இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு இந்த முறையைப் பின்பற்றி சிகிச்சை அளித்துள்ளனர். அவர் மயக்க நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மூளை செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடலின் வெப்ப நிலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கப்பட்டது. அந்த வெப்பத்தில் இறந்த நிலையில், உடலை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம்.

இதை மருத்துவ ரீதியாக உயிரிழந்த நிலை என்று குறிப்பிடுவார்கள். இதையடுத்து 6 நிமிடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இதயத்தில் இருந்த அடைப்பை மருத்துவர்கள் நீக்கினர். மேலும், நோயாளியின் இதயத்தில் பிரச்சினை இருக்கும் இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரத்த ஓட்டம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரத்த ஒட்டம் வழக்கம் போல இருந்தால் இந்த பிரச்சினையை நீக்குவது கடினம் என்பதால் அவர்கள் இப்படி சிகிச்சை அளித்துள்ளனர்.

அதன் பிறகு அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பப் பல மணி நேரம் ஆன நிலையில், அதுவும் கவனமாகவே கண்காணிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போது அவர் நலமாகவே இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+