"இதென்ன கப்புள் டாய்லெட்டா!" உபி-இல் சர்ச்சை கிளப்பிய ரூ.10 லட்ச கழிவறை.. பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடம் குறித்த படங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அங்குக் கதவு இல்லாமலும் இடையே தடுப்பு கூட இல்லாமலும் இரண்டு மலம் கழிக்கும் சிங்க் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பொதுவாகவே அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமானங்கள் குறித்துக் குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அவை போதிய தரத்தில் இல்லை, விலை ரொம்பவே அதிகம் உள்ளிட்ட புகார்கள் இருக்கும்.

இதையும் தாண்டி சமீப காலங்களாகக் கட்டுமானங்களே சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. அரசு காண்டிரக்ட்டை எடுப்பவர்கள் சில சமயம் செய்யும் சம்பவங்கள் இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தையே கிளப்பிவிடுகிறது.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இப்படியொரு சர்ச்சை சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகிறார்கள். உத்தரபிரதேசத்தில் புதிதாக ஒரு இடத்தில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான டாய்லெட் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. இரு டாய்லெட்கள் ஒரே அறையில் அதுவும் பிரிக்கச் சுவர் கூட இல்லாமல் இருந்ததே இந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கவுரா துந்தா கிராமத்தில் தான் இப்படிப்பட்ட டாய்லெட் கட்டப்பட்டுள்ளது.

 10 லட்சமாம்

10 லட்சமாம்

இது தொடர்பான படங்கள் தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்த டாய்லெட் சுமார் 10 லட்சம் செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் கட்டப்படும் இந்த இஸத் கர் டாய்டெல்களில் சில இடங்களில் எந்தவொரு தடுப்புச் சுவரும் கூட இல்லாமல் இதுபோன்ற டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில கழிப்பறைகளில் கதவு கூட இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கழிப்பறை இருந்தும் கூட பொதுமக்களால் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

இந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இதை வைத்துச் செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும் டாய்லெட்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்றும் இந்த டாய்லெட் அமைக்க 10 லட்ச ரூபாயா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர், இது தான் கப்பிள் (couple) டாய்லெட்டா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். காண்டிராக்டர் எந்த யோசனையில் இப்படியொரு டாய்லெட்டை அமைத்திருப்பார் என்றும் அவர்கள் கேட்டு வருகின்றனர்.

 அதிகாரிகள் நடவடிக்கை

அதிகாரிகள் நடவடிக்கை

இந்த விஷயம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி நம்ரதா ஷரன் கூறுகையில், "காம்ப்ளக்ஸில் உள்ள கழிப்பறைகளில் கதவுகள் இல்லாதது, சில கழிப்பறைகளில் தடுப்புகள் கூட இல்லாதது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் இப்படி டாய்லெட்டை அமைந்துள்ளனர் என்று கேட்டுள்ளோம். இந்த சம்பவத்தில் உரியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

 கோவை சம்பவம்

கோவை சம்பவம்

கடந்த செப். மாதம் தமிழ்நாட்டிலும் கோவையில் இதேபோல ஒரு டாய்லெட் குறித்த படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவியிருந்தது. அதில் கோவை அம்மன்குளம் பகுதியில் பொதுக் கழிப்பிடத்தில் இடையே சுவர் இல்லாமல், ஒரே அறையில் இரண்டு மலம் கழிக்கும் சிங்க் இருந்த புகைப்படங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அதற்குக் கோவை மாநகராட்சி, குழந்தைகளுக்காகவே இப்படியொரு கழிவறையை அமைத்ததாக வித்தியாசமான ஒரு விளக்கத்தை அளித்திருந்தது.

 விளக்கம்

விளக்கம்

அதாவது, "இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாகச் சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உட்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதால் கதவுகள் பொருத்தப்படவில்லை" என்று ஷாக் கிளப்பியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+