கணவன் + கள்ளக்காதலன் + காதலன்.. கடைசியில் விபரீதம்.. செப்டிக் டேங்கிற்குள் கீதா.. போன்கூட எடுக்கல
கள்ளக்காதல் விவகாரத்தினால் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார்
லக்னோ: ஒரு வார காலத்துக்கு பிறகு இளம்பெண் மர்மம் குறித்து உபி போலீசார் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் கைது செய்தும் வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக வேலை பார்த்து வருகிறார்..
இவரது மனைவி பெயர் கீதா.. இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.. தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது..

அதிகாரி மனைவி
இதில் மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக இந்தர்பால் அங்கு பணியாற்றி கொண்டிருந்தார்.. தேர்தல் டியூட்டி போட்டதால், அங்கேயே தங்கியும் இருந்து வந்துள்ளார்... இந்நிலையில், கடந்த 21ம் தேதியன்று, மனைவிக்கு மணிப்பூரில் இருந்து போன் செய்துள்ளார் இந்தர்பால்.. ஆனால் கீதா போன் எடுக்கவில்லை.. தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருந்தும், ரிங் போகிறதே தவிர யாரும் எடுக்கவில்லை.

அதிர்ச்சி
இதனால், சந்தேகம் அடைந்த இந்தர்பால் உடனடியாக, அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து, வீட்டு அட்ரஸையும் தந்தார்.. போலீசாரு, இந்தர்பால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்... அங்கே கீதா வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது.. இதை இந்தர்பாலிடம் போலீசார் தெரிவிக்கவும், மீண்டும் அதிர்ச்சி அடைந்த இந்தர்பால் நேரடியாகவே ஊருக்கு கிளம்பி வந்துவிட்டார்.. மனைவியை தேடி தரும்படி போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர்.

கழுத்தை நெரித்து கொலை
முதல்வேலையாக கீதாவின் செல்போனை சோதனையிட்டனர்.. அதில், கீதாவிடம் முக்தர் என்பவர்தான் கடைசியாக பேசியது தெரியவந்தது.. முக்தர் அந்த பகுதியிலேயே கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருபவர்.. இதையடுத்து, முக்தரை தேடி பிடித்து போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் கீதாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. கீதாவின் கள்ளக்காதலன்தான் இந்த முக்தராம்.. இருவருமே நெருங்கி பழகி வந்த நிலையில், திடீரென கீதா இன்னொரு நபருடன் பழகி வந்திருக்கிறார்..

செப்டிக் தொட்டி
இந்த விஷயம் தெரிந்து முக்தர், கீதாவை கண்டித்துள்ளார். ஆனால், கீதா அதை காதிலேயே வாங்கவில்லை என தெரிகிறது.. அதனால் கீதாவை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார் முக்தர்.. சம்பவத்தன்று சமாதானம் பேச காரில் அழைத்து சென்றுள்ளார்.. அந்த காரில் மேலும் 2 பேர் இருந்தார்களாம்.. இவர்கள் எல்லாரும் சேர்ந்துதான், காரிலேயே கீதாவின் கழுத்தை நெரித்து கொன்று, அங்குள்ள கழிவு நீர் தொட்டி ஒன்றில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.. இவ்வளவையும் வாக்குமூலமாக முக்தர் தெரிவித்துள்ளதையடுத்து கைதாகி உள்ளார்.. காரில் கீதாவை கொலை செய்ய உதவிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications