57 மாவட்டங்களில் உயர் தரத்தில் அரசு பள்ளிகள்! அடியோடு மாறும் பள்ளி கல்வி.. யோகி ஆதித்யநாத் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பள்ளி கல்வியை மேம்படுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், 57 மாவட்டங்களில் அதிநவீன 'முதலமைச்சர் மாதிரி கூட்டுப் பள்ளிகளை' நிறுவ யோகி ஆதித்யநாத் முடிவெடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

Yogi Adityanath decides to set up state-of-the-art Chief Minister Model Joint Schools in 57 districts of Uttar Pradesh Yogi Adityanath decides to set up state-of-the-art Chief Minister Model Joint Schools in 57 districts of Uttar Pradesh

அந்த வகையில் பள்ளி கல்வியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 57 மாவட்டங்களில் அதிநவீன 'முதலமைச்சர் மாதிரி கூட்டுப் பள்ளிகளை' நிறுவ யோகி ஆதித்யநாத் முடிவெடுத்துள்ளார். 75 மாவட்டங்களிலும் தலா ஒரு கூட்டுப் பள்ளியை முதல்வர் அபியுதயா கூட்டுப் பள்ளியாக மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

அபியுதயா கூட்டுப் பள்ளி திட்டம் என்பது, அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதாகும். அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1.42 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே மாநில அரசு பள்ளி கல்வித்துறைக்கு ரூ.1,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதிலிருந்து நிதியை பயன்படுத்தி சுமார் 704 ஊராட்சி பள்ளிகள் முதலமைச்சரின் அபியுதயா கூட்டுப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். விசாலமான வகுப்பறைகள், போதுமான அளவு கழிவறைகள், விளையாட்டு மைதான வசதி, ஸ்மார்ட் வகுப்புகள் ஆகியவை இந்த திட்டம் மூலம் உருவாக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+